tamilnadu

img

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2023-24-ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒரு முறை மாற்றப்பட்டு ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன்12-ஆம் தேதியும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கு மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 

;