tamilnadu

img

இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா...   அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்

சேலம்
சென்னை, மதுரையை போலவே சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் புதிய உச்சத்தில் நகர்ந்து வருகிறது. வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களால் அங்கு கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக நகரப்பகுதியில் மட்டுமல்லாது கிராமப்பகுதியிலும் கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், மேட்டூர் பகுதியில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.   

கடந்த வாரம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். செல்வத்துக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை ஆராய மருத்துவக்குழு பங்கேற்றது. அவருக்கு கொரோனா தொற்று இருந்ததோ? இல்லையோ? 2 மருத்துவர்கள் உள்பட இறுதிச் சடங்கில் பங்கேற்ற 4 பேருக்கு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய சோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

;