tamilnadu

img

பணியிடங்கள் அனைத்தும் நிரப்பும் வரை புதிய கிளைகள் திறக்கக் கூடாது தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் தர்ணா

 சேலம், ஆக.8 -  அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் நிரப்பும் வரை புதிய வங்கி கிளைகள் திறக்க கூடாது என தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர் சங்கத்தின் சார்பில் அஸ்தம்பட்டி கிராம வங்கி வளாகத்தில் தர்ணா போராட்டம் வியாழனன்று நடைபெற்றது.  தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டத்திற்கு அலுவலர் சங்க  தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கி னார். இதில் சங்கத்தின் தலைவர் மற்றும்  பொதுச்செயலாளரை வங்கி தலைமை யகத்திற்கு மாறுதல் செய்ய வேண்டும்.  பணியிட மாறுதல் செய்யும் போது  சங்கங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை கொண்டு காலி பணி யிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடை பெற்றது. இந்த தர்ணாவிற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.  கிராம வங்கி அலுவலர் சங்க பொது செய லாளர் அறிவுடைநம்பி, கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.மாதவராஜ்,  தலைவர் சுரேஷ் ஆகி யோர் உரையாற்றினர். ஓய்வுபெற்ற அலு வலர் சங்க தலைவர் புளுகாண்டி, இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் தயாளன், ஓய்வுபெற்ற எல்ஐசி சங்க செயலாளர் டி.சேஷகிரி, சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி. முருகப்பெருமாள் மற்றும் சகோதர சங்கங் களின் தலைவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் கலந்து கொண் டனர்.

;