tamilnadu

img

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.... 

சென்னை 
தற்போதைய நிலையில் தமிழகத்தில் வித்தியாசமான வானிலை நிலவுகிறது. அதாவது சில இடங்களில் கோடை வெயிலும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. 

இந்நிலையில் வங்கக்கடல் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு (குறைந்த) மையம் உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்," தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு (குறைந்த) மையம் உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களுக்குள் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 

தொடர்ந்து வரும் 16-ஆம் தேதி புயலாக மாறும். இதனால் வரும் 15-ஆம் தேதியில் 45-55 கிமீ வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் 65 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடிய வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைத்துள்ள தேனி, குமரி, நெல்லை ஆகிய ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.      

;