tamilnadu

தீக்கதிர் தமிழக செய்திகள்... டாப் 5

தேசியக்கொடி அவமதிப்பு: மன்னிப்பு கோரிய எஸ்.வி.சேகர்
சென்னை:

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் காவல்துறையின் விளக்கத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார். அப்போது, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் எஸ்.வி.சேகர் மன் னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள் ளப்படாது எனத் தெரிவித்தார். அதேசமயம், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.இவற்றைப் பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினால் கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தெரிவித்துள்ளது குறித்து, மனுதாரர் முடிவெடுத்து, அவரது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.இந்நிலையில் தேசியக்கொடியை அவமதித்தது தொடர்பாக எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எதிர்காலத் தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசமாட்டேன் என தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 7ஆம் தேதி வரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

யோகா, இயற்கை மருத்துவப் படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு
சென்னை:

யோகா, இயற்கை மருத்துவ படிப்புகளுக்குவிண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அரசுநீட்டித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21ஆம் ஆண்டுக்கான பி.என்.ஒய்.எஸ். மருத்துவப் படிப்புக்கானவிண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது.இதன்படி மேல்நிலைப்பள்ளித் தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள். இந்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப் பம் செய்யலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப் பங்களை பூர்த்தி செய்து இன்று (3 ஆம் தேதி) முதல் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக் கும் படிவங்களை பெறுவதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 31ஆம் தேதியில் இருந்து இந்த மாதம் 15ஆம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், இட ஒதுக்கீடு விதிமுறைகள் படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர் அடிப்படைத் தகுதி மற்றும் விவரங்களை இந்த அரசு வலை தளத்தில் பெறலாம்.விருப்பத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி தொகுப்பினை வருகிற 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப் பத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்தை வருகிற 15 ஆம் தேதி மாலை 5.30 
மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பலாம். நேரிலும் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை:

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சேலம், தருமபுரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

130 பேருக்கு கொரோனா 
தேனி:

தேனியில் ஏற்கனவே 12,827 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் வியாழனன்று 75 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,902 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 11,428 பேர் கொரோனாவில் இருந்துகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகரில் 55 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் சூலக்கரை, பந்தல்குடி, அருப்புக்கோட்டை காவலர் குடியிருப்பு, புளியம்பட்டி, செங்குன்றாபுரம், காரியாபட்டி, சூலக்கரைவிருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் உட்பட 55 பேருக்கு கொரோனாதொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

கணவர் தற்கொலை மனைவிக்கு அரசு வேலை
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் சாதி வன்மத்தால்சித்திரவதை செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி சுந்தரவள்ளிக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் (கருணை அடிப்படையில்) சத்துணவு பணியாளர் வேலை வழங்கப்பட்டது. அதற்கான நியமன ஆணையை ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் சுந்தரவள்ளியிடம் வழங்கினார்.
 

;