tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் காப்பீடு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

    திருநெல்வேலி, ஆக. 5- நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், மாவட்டத் துணைத் தலைவர் எம்.சுடலை, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில நிர்வாகி சிவன்ராஜ் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது- கொரோனா நோய் தொற்று டாஸ்மாக் கடைகளிலும் பரவி ஊழியர்கள் பாதிக்கப்படுகிற நிலைமையை கருத்தில் கொண்டு அனைத்து கடைகளுக்கும் தேவையான தரமான முககவசம், கையுறை, கிருமி நாசினி மற்றும் தெர்மல் கருவி உள்ளிட்ட பாது காப்பு உபகரணங்களை கால தாமதமின்றி நிர்வாகம் வழங்க வேண்டும்,  ஜிங்க், வைட்டமின் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை நிர்வாக ஏற்பாட்டில் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் ,கொரோனா தொற்று க்கு ஆளாகும் டாஸ்மாக் ஊழி யர்களுக்கு உரிய சிகிச்சைக்கான ஏற்பாட்டை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும், தொற்று கண்டறியப்பட்ட கடைகளில் உள்ள அனைத்து ஊழியர்களை யும்  அவர்களது குடும்பத்தினரை யும் பரிசோதனை செய்வதற்கு நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்,டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்திட வேண்டும் என்று கூறியிருந்தனர்.   முன்னதாக டாஸ்மாக் மேலா ளர் அலுவலக வாயிலில்  ஆர்ப் பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க  மாநில நிர்வாகி சிவன்ராஜ் தலைமை தாங்கி னார், ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், மாவட்ட துணைத் தலை வர் எம்.சுடலைராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;