tamilnadu

பழனி-பழைய தாராபுரம் சாலை விரிவாக்கம் பக்தர்களுக்கு தனிப்பாதை

பழனி:
பழனி பழைய தாராபுரம் சாலையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் பாதயாத்திரை பக்தர்களுக் கென தனிப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழனி பாலாஜி மில்லிலிருந்து பெரிய ஆவுடையார் கோவில் வரையிலும், மானூரிலிருந்து கோரிக்கடவு வரையிலும், பெரிச்சிபாளையத்திலிருந்து ஆண்டிநாயக்கன் வலசு வரையிலான சாலைகளை இருபுறமும் சுமார் ஒன்பது கிலோ மீட்டருக்கு விரிவுபடுத்தும் பணி பகுதி பகுதியாக நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிக்காக ரூ. 20 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது சாலைவிரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை விரிவாக்கப் பணிக்காக பழைய தாராபுரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டு பணிகள் மேற்கொள் ளப்பட்டன. பழனியிலிருந்து ஒசூா் வரை செல்லும் பழைய தாராபுரம் சாலையில் குறுகலான பகுதிகளில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கியதை அடுத்து தற்போது அங்கு சாலை விரிவாக்கப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பாதயாத்திரை பக்தர்களுக்கு என தனிப்பாதை அமைக்கப்படவுள்ளதாக உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் லிங்கராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

;