tamilnadu

img

3 விமான நிலையங்கள் அதானிக்கு குத்தகை... மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுதில்லி:
திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களிலுள்ள விமான நிலையங் களை அரசு - தனியார் கூட்டுமுயற்சி (Public Private Partnership - PPP) அடிப்படையில் அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசுஏற்கெனவே முடிவெடுத்து இருந்தது. 

இந்நிலையில் அந்த முடிவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் புதன்கிழமையன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இது 50 வருட குத்தகை கால ஒப் பந்தம். எனினும் இந்த விமான நிலையங்களை நிரந்தரமாக தனியார் பங்களிப்புக்கு வழங்கப் போவதுகிடையாது. இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை சிறுநகரங்களில் விமான நிலையங்களை அமைப்பதற்கு இந்திய விமானநிலையங்கள் ஆணையம் (AirportAuthority of india) பயன்படுத்தும்” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் மங்களூரு, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள விமானநிலையங்களும் 50 வருட குத்தகைக்கு வழங்கப்படுவதற்கான முடிவு ஓராண்டுக்கு முன்பு மத்தியஅமைச்சரவையில் எடுக்கப்பட் டது. இந்த மூன்று விமான நிறுவனங்களின் குத்தகையையும் அதானி நிறுவனமே பெற்றது.

தற்போது திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், கவுகாத்தி விமான நிலையங்களும் அதானி நிறுவனத்திடம் தரப்பட உள்ளது.தில்லி மற்றும் மும்பை விமானநிலையங்களும் ஏற்கெனவேதனியாருக்கு வழங்கப்பட்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே திருவனந்தபுரம் விமான நிலைய தனியார் மயத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.“கேரள அரசு முன்வைத்த வாதங்களை ஏற்காமல் மத்திய அரசு எடுத்த ஒருதலைப்பட்ச முடிவைப் பார்க்கும்போது, ​இந்த ​முடிவைச் செயல்படுத்த ஒத்துழைப்புவழங்குவதில் எங்களுக்கு சிரமம் இருக்கிறது என்பதை பதிவுசெய்ய விரும்புகிறேன். இது எங்கள் மாநில மக்கள் விருப்பத்திற்கு எதிரானது” என்று மோடிக்கு உடனடியாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

;