tamilnadu

img

கரும்பு கொள்முதல் விலை... விவசாயிகளை ஏமாற்றிய அரசு

மதுரை:
பிழிதிறனை உயா்த்தி கரும்புக்கான விலையை அறிவிப்பது ஆலை முதலாளிக்கு மட்டுமே பயன்தரும். மேலும்,சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும்உபபொருள்களின் விலை உயர்ந் துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் கரும்புக்கான கொள்முதல் விலையையும் உயா்த்த வேண்டுமென தமிழ் நாடு கரும்புவிவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் வழக்கறிஞர் என்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு கரும்பு அரவைப் பருவத்துக்கு (2020-2021) பத்து சதவீத பிழிதிறன் உள்ள கரும்பு டன்னுக்கு ரூ.2,850 எனவும், 9.5 சதவீத பிழிதிறன் உள்ள கரும்பு டன்னுக்கு ரூ. 2,707.50 எனவும் மத்திய அரசு கரும்புக்கான விலையை அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள நிலையில் மத்திய அரசின் விலைஅறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.

கரும்பு சாகுபடிக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலையை அறிவிக்க வேண்டும் என்பதை மத்தியஅரசு ஏற்க மறுக்கிறது. 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், டன் ஒன்றுக்கு ரூ. 100 மட்டும் உயா்த்தி அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் 8.5 சதவீத பிழிதிறனுக்கு கரும்பு ஆதார விலை அறிவிக்கப்பட்ட நிலையில், 25 ஆண்டுகால நடைமுறையை மாற்றி2006- 2007-ஆம் ஆண்டில்  ஒன்பது சதவீதமாக அறிவித்தனர். அதன் பிறகு 9.5 சதவீதம் எனவும், பின்னர்பத்து சதவீதமாகவும் உயர்த்தியிருக் கின்றனர். தமிழகத்தின் சராசரி கரும்புபிழிதிறன் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், மத்திய அரசின் விலை அறிவிப்பு விவசாயிகளுக்குப் பயன்தராது.மத்திய அரசு அறிவிக்கும் விலையைசர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் தருவதில்லை. நாடுமுழுவதும் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் கரும்புத் தொகை பாக்கி உள்ளது. கரும்புக்கான ஆதரவு விலையைஅறிவிக்கும் அரசு, அதை விவசாயிகளுக்குப் பெற்றுத் தர எந்த நடவடிக்கைஎடுப்பதில்லை.தமிழக அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ.450 வரை பரிந்துரை விலை வழங்கிய நிலையில், கடந்த இரண்டாண்டுகளாக மாநில அரசின் பரிந்துரை விலை தரவில்லை. ஆகவே, 2020- 2021 ஆம் ஆண்டுக்கு அரசு கரும்பு பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும்.

பிழிதிறனை உயா்த்தி கரும்புக்கான விலையை அறிவிப்பது ஆலை முதலாளிக்கு மட்டுமே பயன்தரும். மேலும்,சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும்உபபொருள்களின் விலை உயர்ந்துள்ளநிலையில் மத்திய, மாநில அரசுகள் கரும்புக்கான கொள்முதல் விலையையும் உயா்த்த வேண்டும். மேலும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை சுமார் 14 ஆயிரம் குவிண்டால் ஜீனியை விற்கவில்லை. இதை விற் பதன் மூலம் கரும்பு விவசாயிகளின் பாக்கியை வழங்கமுடியும். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது என முடிவுசெய்துள்ளோம். மேலும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட கரும்புகள், பதிவு செய்யப்படாத கரும்புகளை பெற்று சர்க்கரை ஆலையை இந் தாண்டு இயக்கவேண்டுமென்றார்.

;