tamilnadu

img

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கல்யாண் சிங்கிற்கு சம்மன்?

புதுதில்லி:
ராஜஸ்தான் ஆளுநராக இருந்த கல்யாண் சிங் பதவிக்காலம் முடிந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவிலேயே அவருக்கு சம்மன்அனுப்பப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.பாபர் மசூதி இடிப்பிற்குச் சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் 1992-இல் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங் உட்பட 19 பேர்விடுதலை செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து, சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அந்த மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மறு ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.மேலும், இந்த வழக்கை, 2019 ஏப்ரல் 19-ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட் டது. (தற்போது கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.)அதனடிப்படையில், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பிய லக்னோ சிபிஐ நீதிமன்றம், கல்யாண் சிங்கிற்கு சம்மன் அனுப்பவில்லை.

கல்யாண் சிங், கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அரசியல் சாசனப் பாதுகாப்பு இருந்ததால், அவரை விசாரணைக்கு அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது.தற்போது கல்யாண் சிங்கின் 5 ஆண்டு ஆளுநர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. ராஜஸ்தான் மாநிலபுதிய ஆளுநராக, மத்திய முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப் பட்டுள்ளார்.இந்நிலையில், கல்யாண் சிங்கிற்கு,இனிமேல் அரசியல் சாசனப் பாதுகாப்பு இருக்காது என்பதால், அவர்விரைவிலேயே நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

;