world

img

அமெரிக்க நகர மேயர் இந்தியாவுக்கு தூதராக நியமனம்....

வாஷிங்டன்:
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயர் எரிக் கார்சிட்டியை நியமித்து ஜனாதிபதி ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில்“லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கடந்த 2013 ஆம்ஆண்டு முதல் மேயராகவும், 12 ஆண்டுகளாகநகர மேம்பாட்டுக் குழுவில் இருக்கும் எரிக்கார்சிட்டி இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்தத் தகவலை எரிக் கார்செட்டியும் உறுதிசெய்துள்ளார்.பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்கக்கோரி அமெரிக்காவின் மேயர்களை ஒருங்கிணைத்து காலநிலைக்கான மேயர் கூட்டமைப்பை கார்செட்டி உருவாக்கினார். உலகில்உள்ள 97 முக்கிய நகரங்கள் காலநிலை மாற் றத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த நகரங்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் கார்செட்டி உள்ளார்.

;