world

img

ஈரான் - இஸ்ரேலில் போர் பதற்றம்: உதவி எண்களை வெளியிட்ட இந்தியத் தூதரகம்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகங்கள் உதவி எண்களை வெளியிட்டுள்ளன.
சிரியாவில் உள்ள தனது தூதரகத்தைத் தாக்கி முக்கிய ராணுவ தளபதிகளை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்வதற்கு, +972-547520711, +972- 543278392 ஆகிய அவசரகால உதவி எண்களை வெளியிட்டுள்ளது. அங்குள்ள அனைத்து இந்தியர்களும் தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள cons1.telaviv@mea.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்த அறிவுறுத்தல். 
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகமும், அங்கு வாழும் இந்தியர்கள் தொடர்புகொள்வதற்கு +989128109115; +989128109109; +98993179567; +989932179359; +98-21-88755103-5 ஆகிய அவசரகால உதவி எண்களையும், cons.tehran@mea.gov.in என்ற இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.

;