world

img

கொரோனா 4-ஆம் டோஸ் : இஸ்ரேல் அனுமதி...

ஜெருசலேம் 
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கொரோனா வேறியண்ட்கள் மிரட்டி வருகின்றன. கடந்த ஆண்டு டெல்டா வகை கொரோனா மிரட்டி வந்த நிலையில், தற்போது ஒமைக்ரான் வேறியண்ட் மிரட்டி வருகிறது.

ஒமைக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ள நிலையில், மத்திய தரைக்கடல் பகுதி நாடான இஸ்ரேல் ஒமைக்ரானை கட்டுப்படுத்த கொரோனா 4-ஆம் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. 
ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் இதுவரை  65 லட்சம் பேர் முதல் டோஸை செலுத்திக் கொண்டதாகவும், 42 லட்சம்பேர் இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸை செலுத்தியுள்ளனர். 10% மூன்றாவது டோஸ் செலுத்தியுள்ளனர். 

ஒமைக்ரான் பாதிப்பு மிக எளிதாக பாதிக்கப்படலாம் என கருதுபவர்கள் 4-வது டோஸை செலுத்திக் கொள்ளலாம் என்று இஸ்ரேல் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 4வது டோஸை செலுத்திக் கொள்ள அனுமதி அளித்திருக்கும் முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது. சனியன்று காலை முதல் 4-வது தோசை செலுத்தும் பணி தொடங்கியது.

;