tamilnadu

img

குட்கா ஊழல் வழக்கு: டிஎஸ்பி மன்னர் மன்னன் பணியிடை நீக்கம்

குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய டி.எஸ்.பி மன்னர் மன்னன் நாளை பணி ஓய்வு பெற உள்ள நிலையில் இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே ஐ.ஜி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 
குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , டிஜிபி ரஜேந்திரன் சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 
குட்கா முறைகேட்டு நடந்த சமயங்களில் மன்னர் மன்னன் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையராக பணியாற்றினார். அவர் பணம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டவுடன் இவரது வீட்டிலும் செங்குன்றம் காவல் ஆய்வாளர் சம்பத் குமார் வீட்டிலும் கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ ரெய்டு நடைபெற்றது. சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது. 
இந்த குற்றச்சாட்டின்படி, தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வேதுறை ஐ.ஜி. சைலேந்திரபாபு இன்று உத்தரவிட்டுள்ளார். டி.எஸ்.பி. மன்னர்மன்னன், நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், இன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;