states

img

மகாராஷ்டிரம் - பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கப் போகும் விதர்பா -அமே திரோட்கர்

மகாராஷ்டிராவின் விதர்பா மண்டலத்தில் உள்ள 11 மாவட் டங்களில் 10 மக்களவைத் தொகுதி கள் உள்ளன. கிழக்கு விதர்பாவின்  கிழக்குப் பகுதியில் நாக்பூர் உள்ளிட்ட 5 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19 முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இங்கு, பாஜகவுக்கு முன்பிருந்த  சாதகமான நிலை  இப்போது காணப்படவில்லை. பணவீக்கம், வேலையின்மை,  சாதிய முரண்பாடுகள் ஆகிய பிரச்ச னைகள் பாஜகவுக்கு கடுமையான தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. வீணாய்ப் போன சபதம் ஒரு மாதத்திற்கு முன்பு ஒன்றிய  அமைச்சரும், நாக்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான நிதின் கட்காரி பேசிய வீடியோ சமூக வலைத்தளங் களில்  வலம் வந்தது. அதில் அவர்,  18 வது நாடாளுமன்றத்  தேர்தலில் ஒரு பேரணி கூட நடத்த மாட்டேன்; எனது சாதனைகளே நான் செய்தவைகளைப் பேசும் என்று கூறியிருந்தார். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் அவர் பெற்ற வெற்றி இவ்வாறு அவரைப் பேச வைத்தது. ஆனால் இப்போதோ, பாஜகவுக்கு மிகவும் பாதுகாப்பான நாக்பூர் தொகுதியிலேயே நிதின் கட்காரி தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் ஒரு இடம் விடாமல் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஏப்ரல் 19 ல் தேர்தல் நடைபெற்ற மற்ற நான்கு தொகுதிகள் சந்திராப்பூர்,  ராம்டெக், பந்தாரா கோண்டியா, கச்சி ரோலி - சிமூர் ஆகியவை ஆகும். நிதின் கட்கரியை எதிர்த்துப் போட்டியிட்ட வர் நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தொகு தியின் சட்டமன்ற உறுப்பினரும், நாக்பூர் நகர்மாவட்ட காங்கிரஸ் தலை வருமான  விகாஸ் தாக்கரே. இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனே, நிதின் கட்காரி எளிதாக வெல்வார் என்று நம்பப்பட்டது. ஆனால் நாக்பூர் மாவட்ட 3 பகுதி காங்கிரஸ் தலைவர் களும் நிதின் கட்காரிக்கு நண்பர் களாக இருந்த போதிலும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தீவிரமாக வேலை செய்தனர். இது நிலைமை யை முற்றிலும் மாற்றியது.

அம்பேத்கர் பேரன்

காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் தாக்கரேவுக்கு ஆதரவு பெருகியதற்கு பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகு ஜன் அகாதி(விபிஏ) கட்சியின் ஆதர வும் ஒரு காரணம். இத்தனைக்கும் இந்தியா கூட்டணியில் விபிஏ கட்சி இல்லை. இருப்பினும், நாக்பூர் உள்ளி ட்ட ஏழு தொகுதிகளில் இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதாக பிர காஷ் அம்பேத்கர் அறிவித்தார். விபிஏ  கட்சியும் நாக்பூர் தொகுதியில் போட்டி யிடும்; இதனால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் இந்தியா கூட்டணி, விபிஏ இடையே சிதறும் என்று எதிர்பார்த்த நிதின் கட்காரி  அதிர்ச்சி அடைந்தார். பணவீக்கம் வேலையின்மையை மையப்படுத்திய எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான பிரச்சாரம் செய்தது பாஜகவை கலங்க வைத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், கிழக்கு விதர்பாவில் உள்ள 5 மக்கள வைத் தொகுதிகளில் பாஜக 3 தொகுதி களிலும், சிவசேனா ஒரு தொகுதி யிலும் வெற்றி பெற்றன. இப்போது இந்த 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் பாஜகவுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது.

சாதிய முரண்பாடுகள்

ஒரு பக்கம் பணவீக்கம், வேலை யின்மை பிரச்சனைகள் என்றால் இன்னொரு பக்கம் சாதிய முரண்பாடு கள் பாஜகவின் செல்வாக்கை வெகு வாகக் குறைத்துள்ளது. 2014 முதல் விதர்பா மண்டலம் பாஜகவுக்கு தொடர்ச்சியாக வாக்களித்து வந்துள் ளது. அதில் உள்ள 10 தொகுதிகளை யும் பாஜக - சிவசேனா கூட்டணி 2014 இல் கைப்பற்றியது. 2014 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு இப்பகுதியில் மொத்தம் உள்ள 63 சட்டமன்றத் தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்றது.இந்தப் பகுதிதான் வறட்சிக்கும், விவ சாயிகளின் தற்கொலைக்கு அவப் பெயர் பெற்ற பகுதியாகும். இம் மண்டலத்தில் (இன்று) ஏப்ரல் 26 இல்  இரண்டாவது கட்டமாக 5 தொகுதி களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பகுதியில் பாஜக பலமிக்க கட்சி யாக இருந்ததெல்லாம் இப்போது பழங்கதையாகி விட்டது. மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே அரசு, குன்பி மராத்தா சமூக மக்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட பிரி வினர் சான்று வழங்க முடிவெடுத்தது. இதனால் இப் பகுதியில் வாழும் மற்ற ஆதிக்க, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கோபமாக உள்ளன. பாஜ கவினர் குன்பி சமூகத்தின் உட்பிரிவு சாதியினரை சந்தித்து சேதாரத்தை சரி  செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.

‘மோடி பிராண்டை’ மீண்டும் விற்க முயற்சி

ஆனால், பாஜகவின் தேர்தல் வியூகமோ இரண்டு விசயங்களை மையப்படுத்தியதாக உள்ளது. ஒன்று மோடியின் முகம்; இரண்டாவதாக பெரும்பான்மைவாத தேசிய வெறி. மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு அளிக்கும் வாக்கு என ராம்டெக் தொகுதி பாஜக வேட் பாளர் ரஜு பாராவே பிரச்சாரம் செய் கிறார். மோடி  இந்தியாவை உலகின் விஸ்வகுருவாக ஆக்குவதற்காக தினமும் 18 மணி நேரம் உழைப்பதாகக் கூறுகிறார்.  தனக்கு அளிக்கும்  ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு வழங்கும் வாக்காகும் என்கிறார். ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்த லுடன் ஒப்பிடுகையில், தற்போதைய தேர்தலில் ‘மோடி பிராண்டு’ பிரச்சா ரத்திற்கு வரவேற்பு குறைந்துவிட்டது. மக்களின் பெரும் பகுதியினர் ‘மோடி பிராண்டை’ புறக்கணிக்கின்றனர். தீவிர பாஜக ஆதரவாளர்களிடம் தான் ‘மோடி பிராண்டு’ வேலை செய்கிறது. இருப்பினும், வருகின்ற ஆறு கட்ட தேர்தல்களில் பாஜக பல்வேறு தந்திரங்களை செயல்படுத்த திட்ட மிட்டு இருக்கலாம். முதல் கட்டத் தேர்தல் ராமநவமிக்கு  (ஏப்ரல் 17)  அடுத்து வந்தது. ஆனாலும் இப்போதைக்கு நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில்  இந்தியா கூட்டணி, பாஜகவின் கழுத்தைப் பிடிக்கும் அளவுக்கு தீவிரப் போட்டியாக நடைபெற்றுள்ளது.  நன்றி : பிரண்ட் லைன் மே 3,2014 - தமிழில் : ம.கதிரேசன்

எங்கள் எதிர்காலம் எங்கே?
பிரித்திகா கராளே வேதியியலில் பட்டப் படிப்பு படித்தவர். அவரது தங்கை ரித்விகா கராளே  நுண்ணுயிரியலில் முதுகலை முடித்தவர். இருவருக்கும் வேலை இல்லை.” நாக்பூரில் ஒரு வேலையும் கிடைக்கவில்லை” என்கிறார் பிரித்திகா கராளே. அவரது கல்லூரி நண்பர்கள் பலரும் வேலை தேடி புனே, மும்பை, அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு சென்றுவிட்டனர். நாங்களும் வேலைக்காக கடுமையாக முயற்சி செய்கிறோம். பூனா செல்கிறோம். நாக்பூரில் படித்த மாணவர்களுக்கு இனி எதிர்காலமே இல்லை “என்கிறார் பிரித்திகா.

உலுக்கும் விலைவாசி பிரச்சனை

பாஜகவை உலுக்கி எடுத்து வருவது விலைவாசி உயர்வு.  நாக்பூர் நகரம், சந்திராப்பூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகள், சிறு நகரங்கள், ராம்டெக் தொகுதியில் உள்ள பின்தங்கிய வட்டங்கள், உம்ரெட்,சாவ்னர் ஆகிய எல்லா பகுதிகளிலும் விலைவாசி உயர்வு தான் தேர்தலில் சூடான விவாதம் ஆகியுள்ளது. சந்திராப்பூர் தொகுதியில் ரஜூரா எனும் ஊரில் உள்ள பொதுவிநியோகக் கடையின் முன்பு கூடி இருந்த பெண்களில் காதேவி ஜோஹி என்பவர் கடந்த காலத்தை விட எல்லா பொருட்களுமே இப்போது விலை உயர்ந்து  விட்டது. பொது விநியோகக் கடைகளில் அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. ஆனால் பால், சீனி, சமையல் எரிவாயு, சோப் என எல்லாப் பொருட்களும்  கடுமையான விலை கொடுத்து வெளியில் தான் வாங்க வேண்டியுள்ளது . மின் கட்டணம் கடுமையாக உயர்ந்து விட்டது என்கிறார். ரமாபாய் கிரோத், மோடியிடம் சொல்லி நல்ல அரிசியாக போடச் சொல்லு என்கிறார். பல சமயங்களில் புழுத்த அரிசி தான் கிடைக்கிறது எனக் குமுறுகிறார்.

உலகமே சிரிக்கிறது

கிருஷ்ணா திமாண்டே தெலுங்கானாவில் இருந்து சந்திராப்பூருக்கு  புலம்பெயர்ந்தவர். பேக்கரி வைத்திருக்கிறார். மோடி உலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திவிட்டாரா  என்பது பற்றி அவர் கூறும் போது” மோடியின் பிரச்சார இயந்திரம் எப்படி வேலை செய்யும் என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள். இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை பார்த்து உலகமே சிரிக்கிறது” என்கிறார் கிருஷ்ணா.

 

 



 

;