tamilnadu

img

நிலஅளவை-ஆவணக் கட்டண உயர்வை திரும்பப்பெறுக... விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:
மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்  இக்காலத்தில் தமிழக அரசு இரக்கமற்ற முறையில் பல மடங்கு உயர்த்தியுள்ள நிலஅளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்கம் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக மீளமுடியாத துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு நிலஅளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டணங்களை 10 மடங்கு முதல் 70 மடங்கு வரை உயர்த்தி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இரக்கமற்ற இந்த செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.பாகப்பிரிவினை, நிலஎல்லை தொடர்பான தகராறுகள், சட்டப்படி தேவையான ஆவணங்களை பெறுவதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தை மக்களுக்கு இதன் மூலம் அரசு ஏற்படுத்தியுள்ளது.இந்த அபரிமிதமான கட்டண உணர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;