court

img

விவிபேட் வழக்கில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய அனைத்து பொதுநல மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் 'symbol loading unit’ வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்கு சீல் செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவு.
மேலும், தேர்தலில் 2, 3ஆம் இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள், ஈ.வி.எம் இயந்திரங்களை முடிவுகளை சரிபார்க்க, தேர்தல் முடிவுகள்  வெளியான 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, ஈ.வி.எம் இயந்திரங்களை பொறியாளர் குழு சோதிக்க வேண்டும். சோதனையின் போது வேட்பாளர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இருக்க வேண்டும். சோதனையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, இயந்திரத்தின் நிலையை தெரிவிக்க வேண்டும். இதற்கான செலவை புகார் அளிக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஏதாவது கோளாறு இருந்தால் அந்த தொகையை தேர்தல் அதிகாரிகள் திரும்ப அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

;