tamilnadu

img

வீடுகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு... மலைவாழ் மக்கள் போராட்டம்

தேனி:
போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கொட்டகுடி மலைவாழ் கிராமம். இந்த கிராமம் உருவாகி சுமார் 300 ஆண்டுகள் ஆகிறது. இந்தமலைக் கிராமத்தில் பல தலைமுறையாகவசித்து வரும் மலைவாழ் பழங்குடியினர்பயன்படுத்திய நிலத்தில்  தங்களது வாரிசுகளுக்காக வீடுகளை கட்ட ஆரம்பித்தனர். 

வீடுகள் கட்டிய நிலையில் தேனிமாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்  ஆரம்பசுகாதார நிலையம் கட்டுவதற்காக கொட்டகுடியில் உள்ள நத்தம் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தியை மலைவாழ் கிராம மக்களுக்கு தெரிவித்து  ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை கிராம மக்கள்முற்றுகையிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தையும் வழிமறித்து சாலையில் அமர்ந்து  கைக்குழந்தைகளுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.  இதைத் தொடர்ந்து கொட்டகுடி ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் மற்றும்அரசு அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மாற்று இடம் ஒன்றை கிராம மக்கள் காண்பித்தனர். அந்த இடத்தை ஆரம்பசுகாதார நிலையம் கட்டுவதற்கு எடுத்துக்கொள்ளுமாறு கூறியதை தொடர்ந்து.அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்.

;