img

மகாராஷ்டிராவில் அம்பலமான பாஜக- தேர்தல் ஆணைய கூட்டு... குட்டு வெளிப்படுத்தியவருக்கு ஆர்எஸ்எஸ் மிரட்டல்

மும்பை:
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்வேலை செய்யும் டிஜிட்டல் நிறுவனமான ‘சோசியல் சென்ட்ரல்’ நிறுவனத்தின் உரிமையாளர் தேவாங் டேவ். இவர், மத்திய பாஜக அரசின்தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகவலைதளத்தை நிர்வாகிக்கும் தேசிய நிர்வாகியாகவும் உள்ளார். 

பாஜகவின் சார்பிலான, “அச்சமற்ற இந்தியர்” (Fearless Indian), “நான் நரேந்திர மோடியைஆதரிக்கிறேன்” (I Support Narendra Modi) எனும் இரண்டுஇணையதளங்களையும் நிர்வகித்து வருகிறார்.இந்நிலையில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகியான தேவாங் டேவ்-தான் இவ்வளவு காலமும் மகாராஷ்டிரா தேர்தல் ஆணையத்தின் சமூக வலைதள பக்கங்களையும் நிர்வகித்து வந்தார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை மனிதஉரிமை செயற்பாட்டாளர் சாஹேத்கோகலே வெளியிட்டுள்ள நிலையில், அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநில தேர்தல் நடைபெறவிருந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக, திடீரென மாநிலத் தேர்தல் ஆணையர் அஸ்வினி குமாரை நீக்கிவிட்டு பல்தேவ் சிங்கை, பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு நியமித்தது.அந்த பல்தேவ் சிங்-தான், தேவாங் டேவை, மகாராஷ்டிர தேர்தல் ஆணையத்தின் சமூகவலைதள பக்கங்களை நிர்வகிக் கும் பணியில் நியமித்திருக்கிறார். தேர்தலின் போது சமுக வலைதளங்களில் கட்சிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை கண்காணிக்கும் மிகமுக்கிய பொறுப்பை தேவாங் டேவிற்கு வழங்கியுள்ளார். அதாவது பாஜக-வின் ஐடி பிரிவு நிர்வாகிக்கு, அனைத்துக் கட்சிகளையும் கண்காணிப்பு பொறுப்பு வழங்கப்பட் டுள்ளது.

இதனை அம்பலப்படுத்திய மனித உரிமை செயற்பாட்டாளர் சாஹேத் கோகலே, கூடவே தேவாங்டேவின் மதத்துவேச பதிவுகளையும், பொய்ச் செய்திகளையும் எடுத்துக் காட்டினார். தற்போது இந்த உண்மை, பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், ஆத்திமடைந்த பாஜகவினர், செயற்பாட்டாளர் சாஹேத் திற்கு மிரட்டல் விடுக்கத் துவங்கியுள்ளனர்.“ஆர்எஸ்எஸ்-காரர்கள் என் வீட்டின் முன் கூடி ஜெய் ஸ்ரீ ராம் எனகோஷங்கள் எழுப்புகின்றனர். எனது தாயை மிரட்டுகின்றனர்” என சாஹேத் கோகலே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

;