districts

img

சாதி பெயரை சொல்லி அடித்த குத்தகைதாரர்

நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முற்றுகை

சேலம், ஜூலை 23- மாமுல் வழங்காத செருப்பு தைக்கும் தொழிலாளியை சாதிப் பெயரைக் கூறி இழி வாக பேசிய குத்தகைதாரர் மீது வன்கொ டுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் சேலம் புதிய பேருந்து நிலைய பள்ளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாநகரம் புதிய பேருந்து நிலை யத்தில் கடந்த 35 ஆண்டுகளாக முருகேசன் என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். புதிய பேருந்து நிலை யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தொடர்ந்து குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் இளங்கோவன் என்பவர் குத்தகை பணம் வசூ லிப்பதோடு தொடர்ந்து தினமும் ரூ.200 முதல்  300 வரை முருகேசனிடம்  மாமுல் கேட்டு வந் துள்ளார். தற்போது கொரோனா காலம் என்ப தால் போதிய வருமானம் இல்லாத முருகே சன், இளங்கோவன் கேட்ட பணத்தை கொடுக்க முடியவில்லை, இதனால் ஆத்திரம டைந்த குத்தகைதாரர் இளங்கோவன், முரு கேசனை சாதிப்பெயரை சொல்லி திட்டி தாக்கி யுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தொழிலாளர் கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாந கர் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், சிபிஎம் மாநகர வடக்கு செயலாளர் என். பிர வீன்குமார் உள்ளிட்டோர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். குத்தகைதாரர் இளங்கோ வன் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத் தில் உள்ள அனைத்து கடைகளையும் குத்த கைக்கு எடுத்து அநியாய விலைக்கு தொழி லாளர்களிடம் வசூல் வேட்டை செய்து வருகி றார். தற்போது செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசன் என்பவரை அடித்து சாதிப் பெய ரைக் கூறி திட்டியுள்ளார்.  குத்தகைதாரர் இளங்கோவன் மீது வன் கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காவல் ஆய்வாளரிடம் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நடவ டிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரி வித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப் பட்டது. இதில் புதிய பேருந்து நிலைய தொழி லாளர்கள் சிறு விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;