districts

திருச்சி முக்கிய செய்திகள்

கரூரில்  வெப்ப அலை! ஆட்சியர் எச்சரிக்கை

கரூர், ஏப்.24 - தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம்  அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம்  ஏப்.23 அன்று வெளியிட்ட அறிவிக்கையில், தமிழ் நாட்டின் கரூர் உள்ளிட்ட  வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப  அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அத்தியா வசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலை யில், உடனடியாக மருத்து வரை அணுக வேண்டு மென கரூர் மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தியுள்ளார்.

நீர் மோர்ப் பந்தல் திறப்பு

பாபநாசம், ஏப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நெடுந் தெருவில் உத்திராபதி யார் ஆலயம் அருகே தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு  நிகழ்ச்சி நடந்தது. நுகர் வோர் பாதுகாப்பு மையத் தின் மாநிலத் தலைவர் சசிகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பானகம் வழங்கி னார். இதில் தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இலவச கண்புரை பரிந்துரை முகாம்

பாபநாசம், ஏப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த  கபிஸ்தலம் மேற்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் இலவச கண் புரை பரிந்துரை முகாம் நடந்தது. கண் மருத்துவ உதவி யாளர் ரெங்கராஜ் நோயா ளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 16  பேருக்கு கண் புரை  முற்றிய நிலையில் இருப் பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற் கொண்டு, ஐஓஎல் லென்ஸ் பொருத்தி பார் வையளிக்க, தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வட்டார மருத்துவ அலுவ லர் தீபக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோன்று திரு வையாறு அருகே திருவா லம் பொழில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நடந்த முகாமில்,  கண் மருத்துவ உதவி யாளர் ரெங்கநாயகி நோயாளிகளுக்கு பரிசோ தனை மேற்கொண்டதில் 28 பேருக்கு கண்ணில் புரை முற்றிய நிலையில்  இருப்பது கண்டறியப் பட்டு, அறுவை சிகிச் சைக்காக தஞ்சாவூ ருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதில் மருத்து வர்கள் பிரபாகரன், பிரதீப் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

திருத்துறைப்பூண்டி நூலக வாசகர்களின் புத்தக தின விழா

திருத்துறைப்பூண்டி, ஏப்.24 - திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து உலகப் புத்தக தின விழாவை நடத்தின. இதில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி கௌரவிக்கப்பட்டார். விழாவிற்கு தமிழியக்க மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார். எழுத்தாளர் கீழை கதிர்வேல், ராய் டிரஸ்ட் நிறுவனர் முனைவர் துரை ராயப்பன், ஆனந்தம் அறக்கட்டளை நிறுவனர் முருகானந்தம், பாலம் தொண்டு நிறுவனர் செந்தில்குமார், திருத்துறைப்பூண்டி நூலகர்கள் வீரசெல்வம், சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பறவைகள் ஆர்வலர் லயன்ஸ் வேதமணி, சித்த மருத்துவர் ரவி, ஆசிரியர் பாலமுருகன், சமூக  செயற்பாட்டாளர்கள் லெனின் பாபு, கமல், பேராசிரியர்கள் ராம் பிரகாஷ், விஜயசங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காவிரி கடைமடை இலக்கிய வட்டத்தின் நிறுவனர் ஆசைத்தம்பி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

போலி பாஸ்போர்ட்டில்  மலேசியா செல்ல முயன்றவர் கைது 

திருச்சிராப்பள்ளி, ஏப்.24 - திருச்சி விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மலேசியா செல்வதற்கு விமானம் தயாராகிக் கொண்டி ருந்தது. அப்போது விமான பயணிகளின் பாஸ்போர்ட்டை இமிக்கிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பாஸ்போர்ட்டில் முத்தலிப் (48) தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் என்று இருந்தது. முத்தலிப்பின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த இமிக்கி ரேசன் அதிகாரி, முத்தலிப்-யிடம்  தொடர்ந்து விசாரணை நடத்தினார். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்  கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி யதில், முத்தலிப் தனது பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட்  எடுத்தது தெரியவந்தது. மேலும் அவருடைய உண்மை யான பெயர் தமீம் அன்சாரி (48) என்பதும், இவர் சிவகங்கை  மாவட்டம் எலங்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும்  தெரிய வந்தது. இதையடுத்து இமிக்கிரேசன் அதிகாரிகள், திருச்சி விமான நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின்  பேரில் போலீசார் வழக்குப் பதிந்து போலி பாஸ்போர்ட் மூலம்  மலேசியா செல்ல முயன்ற தமிம் அன்சாரியை கைது செய்தனர்.

உலக பூமி தின தூய்மை இயக்கம்
திருவாரூர், ஏப்.24 - ஏப்.22 பூமி தினத்தை கொண்டாடும் வகையில், தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பாக  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோள்களும் நெகிழி யும் (PLANET VS PLASTICS) என்ற கருப்பொருளில் தூய்மை  இயக்கம் நடைபெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மைப் பணியில் பங்கேற்ற திருவா ரூர் வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நியூ பாரத் மெட்ரிகுலேசன் பள்ளி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கேந்த்ரா வித்யாலயா, திருவாரூர் மகரிஷி  வித்யா மந்திர் ஆகிய நான்கு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி  மாணவர்கள் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு சுமார் 120 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களை சேகரித்தனர். இவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்காக, திருவா ரூர் நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்வையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை  எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல போட்டிகள்  நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் பதிவாளர்  பேரா.திருமுருகன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுலோச்சனா சேகர் மற்றும் புவியியல் துறைத் தலைவர் முனை வர் பாலமுருகன் குரு ஆகியோர் பங்கேற்றனர்.

மணமேல்குடியில் தலைமை  ஆசிரியர்களுக்கு கூட்டம்

அறந்தாங்கி, ஏப்.24 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்  மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை யில் நடைபெற்றது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்  இந்திராணி மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.  இக்கூட்டத்தில் ஆண்டுவிழா, நிதி வரவினம் சரிபார்த்தல்,  மடிக்கணினியை முறையாக பயன்படுத்துதல், இணைய தளம் குறித்த உடனுக்குடன் தகவல் பதிவு செய்தல், தேசிய  திறனாய்வு தேர்விற்கு இனி வருங்காலங்களில் தொடர் முயற்சி மேற்கொள்ளல், ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் பதிவு செய்தல், செய்து முடித்தமை, அறிக்கை தருதல், தேர்ச்சி விவரம் மற்றும் மக்கள்தொகைக் கணக்கு  விவரங்களை தொகுத்து மே 10 ஆம் தேதிக்குள் அனுப்புதல், இணைய இணைப்பு சார்ந்த படிவத்தை நிரப்பி  உடனே வழங்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள் அங்கையற்கண்ணி, வேல்சாமி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்  பயிற்சி: மாணவர்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர், ஏப்.24-  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழு  நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர  மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்க ளின் இணைப் பதிவாளர் சி.தமிழ்நங்கை தெரிவிக் கையில், “இந்நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முன்பதிவு மேலாண்மை நிலையத்தில் ஏப்.29 ஆம் தேதி முதல்  நடைபெறவுள்ளது. இப்பயிற்சி செப்டம்பரில் தொடங்கி ஓராண்டு காலம் நடைபெறும். இரு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழ் வழியில் மட்டுமே  நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி, பயிற்சிக்  கட்டண விவரங்கள், நிபந்தனைகள் விரைவில் வெளியிடப் படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் பிளஸ் 2  தேர்ச்சியும், 17 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியில் சேருவது குறித்த நிபந்தனைகள் www. tncuicm.com என்ற இணையதள முகவரியில் விரைவில்  வெளியிடப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04362 - 238253 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு  பணி நிறைவு பாராட்டு விழா

தஞ்சாவூர், ஏப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் களத்தூர்  ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி வளாகத்தில்,  தலைமையாசிரியர் க.கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, ஊராட்சி மன்றத் தலைவர் தி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.  ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பெரியநாயகி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.முருகன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி த.சத்யப்ரியா, பெற்றோர்  ஆசிரியர் கழகத் தலைவர் ரா.சுப்பிரமணியன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். பணி ஓய்வுபெறும் தலைமையாசிரி யர் க.கணேசன் ஏற்புரையாற்றினார். முன்னதாக பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியை வி. அனுசுயா வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சர வணன் நன்றி கூறினார். இதில், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர். 

அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பெண் பலி: 25 பேர் படுகாயம்

தஞ்சாவூர், ஏப்.24- திருவண்ணாமலையில் இருந்து கும்பகோணம் வழி யாக செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்து ஒன்று  புறப்பட்டு, தஞ்சாவூருக்கு வந்தது. பேருந்தை ஓட்டுநர் சிவ சண்முகம் இயக்கியுள்ளார். இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை அந்த பேருந்து 40 பயணிகளு டன் தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது மானங்கோரை பகுதியில், திடீரென ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓடி சாலையோரம்  இருந்த சிறிய பாலத் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு  வாய்க்காலில் கவிழ்ந்தது.   இது குறித்து தகவலறிந்த அய்யம்பேட்டை காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தின் இடி பாட்டுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில், படுகாயமடைந்த 26 பயணிகளை மீட்டு, ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர்  கீழலாயத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி லட்சுமி (50) உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணி களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

உறையூர் நகர்நல மையத்தில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு ஒருவர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.24 - திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மாநகராட்சி சார்பில் நகர்நல மையம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு  முன்பு இந்த நகர்நல மைய கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர் உடைத்து விட்டதாக திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் புகார் கொடுத்தார்.  புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை  நடத்தி, திருச்சி உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில்  தெருவைச் சேர்ந்த மொட்டை மூர்த்தி என்ற தட்சிணா மூர்த்தி (42) என்பவரை பிடித்து கைது செய்தனர். பிறகு  இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். இவர் மீது உறையூர் காவல் நிலையத்தில் பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

வைகை ஆற்றில்  துர்நாற்றத்தால் மக்கள் அவதி

மதுரை, ஏப்.24- மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்  நிகழ்வை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஏப்ரல் 19 ஆம் தேதி வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது. இந்த தண்ணீர் திங் கள்கிழமையன்று மதுரை வைகை ஆற்றை வந்தடைந்த பிறகு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.  இதனால் கள்ளழகர் ஆற்றில் இறங்குமிடம் உள்பட வைகை ஆற்றில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந் தது. மேலும் கழிவுநீரும் ஏராளமாக கலந்ததால்  வைகை ஆற்றில் பெரிதும் துர்நாற் றம் வீசியது. இத னால் கள்ளழகரை தரிசிக்க இரவு முழுவதும் காத்திருந்த  மக்கள் கழிவுநீரில் துர்நாற்றத்துடன் அவதிப்பட்டனர்.  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு முன்னதாக  வைகை ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்று மக்கள்  வலியுறுத்தினர்.

3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர், ஏப்.24 -  மூன்று சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள கெங்காதாரபுரம் செந்தில்நாதன் நகரைச் சேர்ந்தவர் ஏ.ஷேக் முகமதுமைதீன் (45). ஆட்டோ ஓட்டுநரான இவர், 2022 அக்டோபர் மாதம் முதல் 2023 மே மாதம் வரை 6 வயதுடைய இரு சிறுமிகள், 10 வயது சிறுமி ஆகியோரை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இவர்களில் ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய போது, ஷேக் முகமது மைதீன் மற்ற இரு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தது வெளியில் தெரிய வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ஷேக் முகமது மைதீனை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜ் விசாரித்து, ஷேக் முகமது மைதீனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.  மேலும், மூன்று சிறுமிகளுக்கும் முறையே ரூ. 2 லட்சம், ரூ. 2.50 லட்சம், ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

வாழைக்காய்க்கு போதிய விலை இல்லை: விவசாயிகள் கவலை

சின்னாளப்பட்டி, ஏப்.24- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு  பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் நடக்கிறது. இங்கு  வாழைக் காய்களைவிற்பனை செய்ய மார்க்கெட் உள்ளது.வாரத்தில் திங்கள்  மற்றும் வெள்ளிக்கிழமை மாலை நடை பெறும் மார்க்கெட்டில் பெங்களூர், சென்னை ,கோவை போன்ற பெருநக ரங்களில் இருந்து மொத்த வியாபாரிகள்  நேரில் வந்து வாழைக்காய்களை விலைக்க வாங்கி லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.  மதுரை மற்றும் வத்தலக்குண்டுவைச் சுற்றி யுள்ள கிராமங்களில் சித்திரைத்  திருவிழா நடைபெறுகிறது. ஆகையால் நல்ல  விலை கிடைக்கும் என்று வத்தலக்குண்டு பகுதி வாழை விவசாயிகள் அதிக அளவில்  வாழைக்காய்களை வத்தலகுண்டு மார்க்கெட் டுக்கு கொண்டு வந்தனர்.ஆனால் விலை ஏற்றம் அடையாததால் வாழை விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். கடந்த முறை விற்ற அதே விலையில்  விற்பனையானது.செவ்வாழை ஒருதார்  ரூ.800-க்கும், ரஸ்தாலி ஒரு தார் ரூ.500-க்கும்,  கற்பூரவள்ளி ஒரு தார் ரூ 500 க்கும், நாடு ஒரு தார் ரூ.500-க்கும்,ஒட்டு வாழை ஒரு தார் ரூ.300-க்கும் விலை போனது. விலை கூடு தலாக போகும் என்று நம்பி வந்த விவசா யிகள் விலை ஏறாததால்ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

குழித்துறை, ஏப்.24- குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் சித்திரை பத்தாம் உதய பொங்கல் திருவிழா ஏப்ரல் 23 செவ்வாயன்று நடைபெற்றது தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதி யான கொல்லங்கோடு பகுதியில் அமைந்துள்ளது பத்ரகாளி அம்மன் கோவில். இங்கு ஆண்டு தோறும் மீனபரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.  அவ்வாறு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் குழந்தைகளின் பெற்றோர் சித்திரை பத்தாம் நாள் மூலக்கோவிலில் வந்து பொங்கலிட்டு நேர்த்திக்கடன் முடிந்ததற்கு நன்றி தெரி விக்கும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை பத்தாம் நாள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா செவ்வாய் காலை பத்து மணிக்கு கோவில் தந்திரி, பண்டார அடுப்பில் தீ மூட்டி துவக்கி வைத்தார் . இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் கே ளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பமாக வந்து கோவிலை சுற்றி புதுப்பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டு செலுத்தினர்.

 

;