india

img

இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று குறைந்தது...

புதுதில்லி:
இந்தியாவில் 145 நாட்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 32,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 32 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் கொரோனா தொற்று இந்த அளவுக்கு முதல் முறையாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 1.18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 924 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர் சதவீதம் 97.48 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 417 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 31 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 179 பேரும், கேரளாவில் 109 பேரும் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை 49 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரத்து 652 பேருக்கு மாதிரிகள்பரிசோதிக்கப்பட்டன. ஞாயிறன்று மட்டும் 11 லட்சத்து 81 ஆயிரத்து 212 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 54.58 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;