india

img

மீண்டும் வாக்குச் சீட்டு தேர்தல் நடைமுறைக்கு திரும்ப முடியாது

புதுதில்லி, ஏப். 26 - தேர்தல் முடிவுகள் அறி விக்கப்பட்ட பிறகு, வாக்குப் பதிவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறும் வேட்பாளர்கள் சந்தேகம் எழுப்பும் பட்சத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) மைக்ரோ கண்ட்ரோலரில் உள்ள மெமரியை ஆய்வு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவிகிதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு களுடன் ஒப்பிட வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். பழையபடி வாக்குச் சீட்டு முறையிலான தேர்த லுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப் பட்டிருந்தன.

இந்த மனுக்களை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று (ஏப்.26) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையே வேண்டும் என்ற மனு தாரர்கள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது. “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்ப ரீதியான, அறிவியல் ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமை யாக ஏற்றுக்கொள்கிறோம். பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடை முறையே சரியாகத் தான் உள்ளது.  தேர்தல் நடைமுறையை சந்தேகிப் பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும். எனவே, மனுதாரர்கள் தரப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் குறித்து வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிரா கரிக்கப்படுகின்றன” என்று நீதிபதி கள் கூறினர்.

எனினும், இந்த தேர்தல் முறை யின் மீது நம்பிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு 2 விதமான தீர்வுகளையும் அவர்கள் வழங்கி னர். முதலாவதாக, விவிபேட்-டில் (VVPAT) சின்னங்களை பதிவேற்றும் செயல்முறை முடிந்ததும், சின்னங் களைப் பதிவேற்றும் இயந்திரங் களை (Symbol Loading Unit - SLU) கொள்கலனில் வைத்து, வேட்பாளர் கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் கையெழுத்துடன் முத்திரையிட்டு பாதுகாக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களுடன் சேர்த்து சின்னங்களை பதிவேற்றும் இயந்திரங்களும் உறுதியான அறைகளில் (strong rooms) வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனை மே 1 முதல் நடை முறைக்குக் கொண்டு வரவேண்டும். இரண்டாவதாக, “தேர்தலில் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற  வேட்பாளர்கள் கோரிக்கை வைத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோ லரில் உள்ள மெமரியை தொழில் நுட்ப பொறியாளர்கள் ஆய்வு செய்ய  வேண்டும். நாடாளுமன்ற தொகு திக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 சதவிகித மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யலாம்.  

இதற்கான கோரிக்கையை தேர்தல் முடிந்த 7 நாட்களுக்குள் வேட்பாளர்கள் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். அந்த கோரிக்கை யை ஏற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரித்த பொறியாளர் குழு ஆய்வு செய்ய வேண்டும்.  இந்த ஆய்வின்போது வேட்பாளர்கள் வாக்குச்சாவடி எண்களைக் குறிப்பிட்டு, ஆய்வுக் கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடையாளம் காட்ட வேண்டும்; பொறியாளர் குழு மின்னணு வாக்குப் பதிவு  இயந்திரத்தை ஆய்வு செய்யும் போது வேட்பாளர்கள் மற்றும் அவ ரது பிரதிநிதிகள் உடன் இருக்கலாம்; இந்த ஆய்வுக்குப் பிறகு தேர்தல் அதிகாரி அதுபற்றிய விபரத்தை அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த ஆய்வுக்கான மொத்த செலவை ஆய்வு கோரி விண்ணப்பித்த வேட்பாளர் கணக்கி லும், அவரது தேர்தல் செலவிலும் சேர்க்க வேண்டும்; ஒருவேளை ஆய்வின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் வேட்பாளரின் செலவுத்தொகை திருப்பி வழங்கப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “ஏற்கெனவே நடை முறையில் உள்ள 5 சதவிகித விவிபேட் ஒப்புகைச் சீட்டுக்களை சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்வதுடன், விவிபேட் ஒப்புகைச் சீட்டுக்களை இயந்திரம் மூலம் எண்ணுவது குறித்தும் ஆலோசிக்கலாம்; மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன் பார் கோடு இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யலாம்” என்றும் பரிந்துரைகளை வழங்கி யுள்ளனர்.

;