states

img

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பசுவதைக்கு சுதந்திரம் அளிக்கிறதாம்

தோல்வி பயத்தால் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக வினர் இந்து - முஸ்லிம் மக்க ளிடையே மோதலை தூண்டும் வகை யில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற னர். 2 வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான்  மாநிலம் பன்ஸ்வாராவில் மோடி, “அதிக குழந்தை பெற்றுக் கொள்ப வர்கள்; ஊடுருவல்காரர்கள்” என முஸ்  லிம்களை இழிவுபடுத்தியும், “இந்து மக்  களே தங்களிடம் உள்ள தங்கம் மற்றும்  மாங்கல்யத்தை காங்கிரஸ் கட்சி பறித்  துக் கொள்ளும்” என்றும் தனது பிரதமர்  பொறுப்பை மறந்து வெறுப்புப் பேச்சை  கக்கினார். இதற்கு நாடு முழுவதும் கண்ட னம் குவிந்து வரும் நிலையில், அந்த வரி சையில் உத்தரப்பிரதேச பாஜக முதல்வர்  யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தேர்தல்  அறிக்கை மூலம் இந்து - முஸ்லிம் மக்க ளிடையே மத வன்முறையை தூண்டும்  வகையில் தீவிரமாக பேசி வருகிறார். 

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பேரணியில்,”காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்  தால் நாட்டில் பசுவதைக்கு சுதந்திரம் அளித்துள்ளது. பாரத மக்களின் மத  உணர்வுகளுடன் எப்படி விளையாடப் பார்க்கிறார்கள் என்று பாருங்கள். நாம் வணங்கி தாயைப் போல் நடத்தும்  பசுவை கசாப்புக் கடைக்காரர்களிடம்  அறுப்பதற்காக ஒப்படைப்பார்கள். இதை இந்தியா ஏற்குமா?” என சர்ச்சைக்  குரிய வகையில் பேசியுள்ளார். 

யோகிக்கு கண்டனம்
யோகி ஆதித்யநாத் கூறியதைப் போல காங்கிரஸ் தனது அறிக்கையில் அப்படி எதுவும் கூறவில்லை. நாட்டு மக்கள் மற்றும் சிறும்பான்மையினரின் உணவு மற்றும் உடை விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்று மட்டுமே காங்  கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்  டுள்ளது. ஆனால் பாஜக முதல்வர்  யோகி ஆதித்யநாத் இதனை மத ரீதி யாக திரித்து இந்து - முஸ்லிம் மக்க ளிடையே மோதலை தூண்டும் வகை யில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பிர தமர் மோடியைப் போலவே, ஒரு மாநில  முதல்வர் என்ற பொறுப்பை மறந்து  பொய் குற்றச்சாட்டுக்களை முன்  வைத்து தனது பதவியின் மாண்பு களை யோகி ஆதித்யநாத் இழிவுபடுத் திக்கொண்டுள்ளார். இதனால், பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

;