tamilnadu

img

தில்லியில் அக்டோபர் முதல் வாரம் வரை பள்ளி திறப்பு இல்லை... 

தில்லி 
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் இன்னும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில மாநிலங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறது. 

கல்வித்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தில்லி போன்ற மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளை திறக்கும் முனைப்பில் இருந்தன. கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகமானதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பில் கவனம் செலுத்தாமல் கொரோனா தடுப்பு வேலையில் வழக்கம் போல களமிறங்கியுள்ளன. 

கேரள மாநிலம் ஒருபடி மேலே சென்று அடுத்தாண்டு ஜனவரி வரை பள்ளி திறப்பு பற்றிய பேச்சுக்கு இடமில்லை எனக் கூறி, மாணவர்களின் கற்றல் நோக்கம் குறித்து சிறப்பு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறது. இந்நிலையில், நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் வரும் அக்டோபர் 5 வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும் எனவும் அடுத்து எப்பொழுது திறக்கப்படும் என முழுமையாக கூறாமல் புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகள், கற்றல் நடவடிக்கைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.  

;