சாதி ஒடுக்குமுறை மற்றும் சாதியப் பாகுபாடு நீண்டநெடிய வரலாற்றைக் கொண்டது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பு முறைமைக்குள் அதன் வேர்கள் ஆழமாக புதைந்தும் உள்ளன. முதலாளித்துவ வளர்ச்சி சாதிய பாரபட்சங்களை மேலும் வளர்க்கிறது. சமூக சீர்திருத்த இயக்கங்களின் வாயிலாக சாதி அமைப்பு முறையை அனைத்து வடிவிலான சாதியப் பாகுபாடுகளை ஒழிப்பது ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமான பகுதியாகும்.