world

img

பருவநிலை மாற்றம் மனிதக்குலத்திற்கான அபாய எச்சரிக்கை - ஐநா  

பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.நா அது மனிதக்குலத்திற்கே அவசரக்கால அபாய எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றத்திற்கான குழுவில், 195 உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழு தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை, மனிதக் குலத்திற்குப் பல எச்சரிக்கைகளைப் பிறப்பிப்பது போல அமைந்துள்ளது. 

பூமி மிகவேகமாக வெப்பமயமாகி வருவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் அதிகரிக்கும் போது அதன் தாக்கங்கள் தீவிரமடை
யும். 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நினைத்ததை விட முன்பாகவே உயர வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. 2030களின் முற்பகுதி
யில் பூமி வெப்ப நிலை கூடி, 1.5 ℃ வெப்பமயமாதல் வரம்பை எட்டும், அதாவது நினைத்ததைவிட 10 வருடங்கள் முன்பாகவே இந்த நிலையை எட்ட உள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 1901, 1971 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சராசரியாக ஆண்டுக்கு 1.3 மிமீ என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்தது இருந்தது. இது 2006, 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, வருடத்திற்கு  3.7 மிமீ  என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது இரண்டு மடங்கை விட வேகமாகக் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. 1950களில் இருந்து பெரும்பாலான நிலப்பகுதிகளில் வெப்ப உச்சநிலைகள் அடிக்கடி நடக்கின்றன. அதே நேரத்தில் குளிர் தீவிரங்கள் குறைவாக நடக்கின்றன.

இந்த பருவநிலை மாற்றத்தால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நிகழும் கடும் வெப்பம், அதிகனமழை, வறட்சி போன்றவை, இனி அடிக்கடியும், தீவிரமாகவும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வானிலை நிகழ்வுகள் அதிக அளவு நடைபெறும். தீவிர வெப்ப அலை மற்றும் வறட்சி போன்றவை இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தீவிர நிகழ்வின் சரியான காரணங்களை அடையாளம் காண்பது கடினம் என்றாலும், ஒவ்வொரு தீவிர நிகழ்வுகளின் அளவு மற்றும் நிகழ்தகவுக்கு மனித பங்களிப்பை விஞ்ஞானிகள் இப்போது அளவிட முடியும். 

கடந்த 2000 வருடங்களில் இல்லாத அளவுக்கு மனித செயல்கள் காலநிலையை மோசமாக வெப்பப்படுத்தியுள்ளது.  இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவிவெப்ப மயமாதலை மட்டுப்படுத்த முடியும். அதற்குக் காரணமான பெட்ரோலியம், நிலக்கரி பயன்பாட்டைப் பெருமளவில் உடனடியாக குறைக்க வேண்டும் என இந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஐபிசிசியின் இந்த அறிக்கையை "மனிதக்குலத்திற்கான கோட் ரெட் குறியீடு" என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் வர்ணித்துள்ளார்.

;