districts

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

சென்னை, மார்ச் 2 - பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புதனன்று (மார்ச் 2) மாமன்ற உறுப் பினர்களாக பதவியேற்றுக் கொண்ட னர். சென்னை மாநகராட்சி தேர்தலில்  திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி பெரு வாரியான இடங்களை கைப்பற்றி யது. இதன்படி, திமுக 153, காங்கிரஸ் 13, சிபிஎம் 4, விசிக 4, மதிமுக  2, சிபிஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு இடங்கள் என 178 இடங்களில் வெற்றி பெற்றது.  அதிமுக 15, சுயேச்சைகள் 5, அமமுக  மற்றும் பாஜக தலா ஒரு இடம் என்ற அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பெண்களுக்கு உள்ளாட்சிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் 51 விழுக்காடு பெண்கள் (102 பேர்) வெற்றி பெற் றுள்ளனர். மாநகராட்சி வரலாற்றில் ஆண்களை விட பெண்கள் அதிக மாக இருப்பது இதுவே முதல் முறை. தேர்தலில் வெற்றி பெற்றவர்க ளுக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், ஆணை யரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ககன்தீப் சிங்பேடி  பதவி பிரமானம் செய்து வைத்தார்.  பதவியேற்றுக் கொண்ட உறுப் பினர்கள் தலைவர்கள், வழிகாட்டி களுக்கு நன்றி தெரிவித்தும், சிலர் தனித்துவமான சொற்களையும் பயன்படுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 98ஆவது மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, “சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நாமம் வாழ்க”  என்றும், 123ஆவது மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி “சோசலிசம்  வாழ்க” என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 42ஆவது மாமன்ற  உறுப்பினர் ரேணுகா, “வெல்க பொது வுடைமை கொள்கை” என்றும் கூறி  பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட னர்.

மார்ச் 4 மேயர் தேர்தல்
இந்நிகழ்விற்கு பிறகு பேசிய ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் மார்ச் 4ந் தேதி நடைபெறும். அன்றையதினம் காலை மேயர் பதவிக்கும், பிற்பகலில் துணை மேயர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும். ஆகவே, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறா மல் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

புதிய கூட்ட அரங்கு: திருமா
இந்த பதவியேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன் எம்.பி.,  கலந்து கொண்டார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் பேசுகையில், “மெத்தப் படித்த ஏராளமானோர் மன்ற உறுப்பினர்களாக பதவி யேற்றுள்ளனர். மாமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 150லிருந்து 200ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கூட்ட அரங்கு சிறியதாக உள்ளது. ரிப்பன் மாளிகை பாரம்பரிய கட்டிட மாக இருப்பதால் விரிவுபடுத்த முடியாது. எனவே கூட்டம் நடத்து வதற்கென்று தனி கட்டிடம் கட்ட வேண்டும்” என்றார்.

தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி தேர்த லில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 28ஆவது வட்ட உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி உள்ளிட்ட 70 மாமன்ற உறுப்பினர்க ளுக்கும் ஆணையர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, அப்துல்சமது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆவடி மாநகராட்சி
ஆவடி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 48 மாமன்ற உறுப்பி னர்களுக்கு ஆணையர் சரஸ்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  10ஆவது வட்ட உறுப்பினர் அ.ஜான்,  4ஆவது வார்டு உறுப்பினர் ஆசிம் ராஜா உள்ளிட்டோரும் பதவி யேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் அமைச்சர் சா.மு.நாசர், ஜெயக்குமார் எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

;