districts

img

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கல்

புதுக்கோட்டை, நவ.10-  கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்  தைகளின் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான பணிக்  குழு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் வியாழ னன்று நடைபெற்றது. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு  பெற்றோரை இழந்த குழந் தைகளுக்கு நிவாரணத்  தொகை வழங்கிடவும், அவர் களின் கல்வி நிலை குறித்து கண்காணித்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான பணிக்  குழு மற்றும் கண்காணிப்புக் குழு மாவட்ட ஆட்சியர்  தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.  இக்குழுவில் மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், இணை  இயக்குநர் (மருத்துவம்), கூடுதல் காவல் கண்காணிப் பாளர் (பெண்கள் மற்றும்  குழந்தைகள் கடத்தல் தடுப்பு காவல் பிரிவு), நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் தொண்டு நிறுவன இயக்கு நர் ஆகியோர் உறுப்பினர் களாக உள்ளனர். இதன்படி வியாழனன்று நடைபெற்ற கூட்டத்தில் கொரோனாவால் பெற்  றோரை இழந்த குழந்தை களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விவா திக்கப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி யாக ஏற்கனவே 142 குழந்தை களுக்கு ரூ.4 கோடியே 30 லட்  சம் நிவாரண உதவித்  தொகை வழங்கப்பட்டுள் ளது.  மேலும் 59 குழந்தைக ளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 77 லட்சத்திற்  கான உத்தரவினை வழங்  கும் பொருட்டு முதல்கட்ட மாக 5 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இத்தொகை களை குழந்தைகளின் எதிர்  கால நலன் கருதி செலவிட குழந்தைகளின் பாதுகாவ லர்களிடம் மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் இணை இயக்குநர் ஊரக நலப் பணி கள் மரு.ராமு, மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா.அனிதா, நன்ன டத்தை அலுவலர் பிரேம் நாத், குழந்தைகள் நலக் குழுத் தலைவர் சதாசிவம், தொண்டு நிறுவன இயக்கு நர் குழந்தைவேலு உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

;