economics

img

ரெப்போ வட்டி விகிதம்  4 சதவீதமாகவே தொடரும்..   ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்....

புதுதில்லி:
 வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ) மாற்றமில்லை என்றும் வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும்  கடன்களுக்குவசூலிக்கும் வட்டியே ரெப்போ விகிதம் என அழைக்கப்படுகிறது. வங்கிகளின் வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி ஜூன் 4 அன்று நிதிக்கொள்கைக் குழு கூட்டம் ரிசர்வ் வங்கி வளாகத்தில் அதன் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில்  நடைபெற்றது.

பின்னர் ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.  நாணயக் கொள்கைக் குழு (எம்.சி.சி) நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாக்களித்தது, அதாவது ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவே மாறாமல் உள்ளது. நீடித்த அடிப்படையில் வளர்ச்சியைப் புதுப்பிக்கவும், நிலைநிறுத்தவும், பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கத்தைத் தணிக்கவும் தேவையான வரை இடவசதி நிலைப்பாட்டைத் தொடர  முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும்.  ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிக்கப் பட்டுள்ளது. இதேபோல் 2021 – 2022 ஆம் நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

;