tamilnadu

img

ஏழைகள் வெளியேறுமாறு குஜராத் பாஜக அரசு நோட்டீஸ்... டிரம்ப் வருகைக்காக அடுத்த அராஜகம்

அகமதாபாத்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியாவுடன் பிப்ரவரி 24, 25 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற் கொள்கின்றனர்.24-ஆம் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில், இந்தியப் பிரதமர் மோடியுடன் சேர்ந்து,உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் டிரம்ப், சபர்மதி ஆசிரமத்தில் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை 100 கோடி செலவில் ஏக தடபுடலாக குஜராத் பாஜக அரசு செய்து வருகிறது. டிரம்ப் பயணிக்கும் வழிகளில், அவரை கவரும் வகையில் சாலைகள் புதுப்பிக்கப் பட்டு வருகின்றன. 

படேல் சர்வதேச விமான நிலையத்தில் துவங்கி மொதேரா மைதானம் வரை டிரம்ப் காரில்செல்லும் பகுதியில், சரணியாவாஸ் அல்லது தேவ் சரண் சேரிஎன்று அழைக்கப்படும் குடிசைப் பகுதிகள் உள்ள நிலையில், அவை டிரம்ப் கண்களில் பட்டுவிடாதபடி 8 அடி உயரத்திற்குசுவர்கள் எழுப்பி மறைக்கப்பட்டுள்ளன. இது அண்மையில்கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தி யது.இதனிடையே, இந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் 45 குடும்பங்கள் 7 நாட்களில் இடத்தைக் காலி செய்து வெளியேற வேண்டும் என்று அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் புதியசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு நோட்டீஸ்களும் அனுப்பப் பட்டுள்ளன.ஏழைகளை வெளியேற்றும் இந்த உத்தரவுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிரம்ப் வருகைக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை; இது வெறும் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மட்டுமே என்று மாநகராட்சி அதிகாரிகளில் ஒருவரான கிஷோர் வர்ணா சமாளித்துள்ளார்.

;