tamilnadu

img

எதிர்பார்த்தது நடந்தே நடந்துவிட்டது... நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ மகள்!

அலகாபாத்:
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. இவர், காதல் திருமணம் செய்துகொண்டதனது மகள் சாக்ஷி மிஸ்ராவையும் (23). அவரது கணவரும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான அஜிதேஷ் குமாரையும் (29) படுகொலை செய்யப் போவதாக ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தார்.

தந்தையின் இந்த செயலால் அச்ச மடைந்த மகள் சாக்ஷி மிஸ்ரா, தனக்கும் தனது கணவருக்கும் சூழ்ந்துள்ள ஆபத்தை சமூகவலைத்தளங்களில் வீடியோ பதிவாக வெளியிட்டு பகிரங்கப்படுத்தினார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அத்துடன், “பிரதமர் மோடி, தனது தந்தை ராஜேஷ் மிஸ்ராவை நேரில் அழைத்துப்பேசி அவரின் மனநிலையை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்த சாக்ஷி, தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு நீதிமன்ற த்திலும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
நாங்கள் இருவரும் வயது வந்தவர்கள். விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம். எங்களது அமைதியான வாழ்க்கையில் போலீசாரோ அல்லது பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவோ இடையூறு செய்யக் கூடாது என்று அவர்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.திங்களன்று இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது, சாக்ஷி தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிபதி சித்தார்த் வர்மா உத்தரவிட்டார்.ஆனால், நீதிபதி இவ்வாறு தீர்ப்பு வழங்கிய அடுத்த சில நிமிடங்களில், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே, அங்கிருந்த வழக்கறிஞர்களால், சாக்ஷி-யும், அவரது கணவர் அஜிதேஷூம் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, அதே நீதிமன்ற வளாகத்தில் மற்றொரு காதல் தம்பதி கடத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அவர்கள் பதேபூர் பகுதியில் மீட்கப்பட்டு உள்ளனர்.

;