tamilnadu

கேரளத்தில் மேலும் 11 பேருக்கு கோவிட்: அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள்

திருவனந்தபுரம், மே 18-  கேரளத்தில் சனியன்று மேலும் 11  பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட் டது. இவர்கள் அனைவரும் மாநிலத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் சனியன்று நடந்த கோ விட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியா ளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: புதி தாக கோவிட் உறுதி செய்யப்பட்டதில் திரிச்சூர் மாவட்டம் 4 பேர், கோழிக்கோடு 3,  பாலக்காடு, மலப்புறம் மாவட்டங்களில் தலா  இருவர் உள்ளனர். இதில் 7 பேர் வெளிநாடு களில் இருந்தும் தலா இருவர் தமிழ்நாடு,  மகாராஸ்டிராவில் இருந்தும் வந்தவர்களா வர். இவர்களோடு சிகிச்சை பெற்று வருவோர்  எண்ணிக்கை 87 ஆனது. இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 497 பேர். நோயால் பாதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4  பேர் குணமடைந்தனர். இவர்கள் கண்ணூர், வயநாடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். விமான நிலையம் மூலமாக 2911 பேரும்,  துறைமுகம் வழியாக 793 பேரும், சோதனை  சாவடி வழியாக 50,320 பேரும், ரயில் மூலம்  1021 பேர் உட்பட மொத்த் 55,045 பேர் கேர ளத்திற்கு வந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்க ளில் 56,981 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 56,362 பேர் வீடுகளிலும் 619 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். 182 பேர் சனிக்கிழமையன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  இதுவரை 43,669 நபர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டன. இவற்றில் 41,814 பேரது  மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என தெரி யவந்தது. அதிக சமூக தொடர்பு உள்ள சுகா தார பணியாளர்கள், வெளிமாநில தொழிலா ளர்கள் போன்ற முன்னுரிமை பகுதியினரில் இருந்து 4764 பேரது மாதிரிகளில் 4644 நோய்  தொற்று இல்லை என பரிசோதனை முடிவு கள் கிடைத்துள்ளன.

;