tamilnadu

img

சிலந்தி..!

மேலும் கீழும் தாவியே

சின்ன சின்ன வலை பின்னி

எங்கள் வீட்டில் வாழுது

காணும் மூலை முடுக்கெல்லாம்

எட்டுக் கால்கள் தான் கொண்ட

சின்னச் சிலந்திப் பூச்சியே.


நேர்த்தியாக வலை பின்ன

எடுக்கும் முயற்சிகள் அதிகமே

எத்தனை முறை விழுந்தாலும.

வலை தான் அறுந்து போனாலும்

தொடர்ந்து முயற்சி செய்யுமே

விடாமுயற்சியால் வெல்லுமே.


தோற்றுப் போன மன்னனும்

குகையில் ஒழிந்து இருந்தானே

உயிரை மாய்க்க நினைக்கையில்

சிலந்தியின் செயலை பார்த்தானே

தோல்வி என்றும் முடிவல்லவென

உணர்ந்து வெற்றி பெற்றானே.


கற்றுக் கொடுப்பது யாராயினும்

கற்றுக் கொண்டால் பலனுண்டு

விடாமுயற்சியைக் கற்றுத் தரும்

சிலந்தியை நாமும் பின்பற்றி

விடாமல் நாமும் முயற்சிப்போம்

சிறந்த வெற்றி பெற்றிடுவோம்.



-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்


;