tamilnadu

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பூண்டி.கே.கலைவாணன் வாக்கு சேகரிப்பு

திருவாரூர் ஏப்.4-திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பூண்டி.கே.கலைவாணன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஊர்க்குடியில் தொடங்கி அத்திசோழமங்கலம், தாழைக்குடி, திருமதிக்குண்ணம், நாகக்குடி, காவனூர், அம்மையப்பன், பெருந்தரக்குடி, தேவர்கண்ட நல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர் கிழக்கு-மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் சந்திப்பு நடைபெற்றது. இப்பணியில் திமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, செயற்குழுஉறுப்பினர்கள் பி.கந்தசாமி, எம்.சேகர், ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் கேசவராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஜெயபால், விசிகமாவட்டச் செயலாளர் மா.வடிவழகன், ஒன்றியச் செயலாளர் ஈ.வெ.ரா மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



;