tamilnadu

img

குழப்பத்தின் உச்சத்தில் தமிழ்நாடு அரசு : இரா. முத்தரசன் சாடல்

சென்னை:
தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு குழப்பத்தின் உச்சியில் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை:கொடிய கொரோனா நோய் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சென்னை மாநகரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.நோய் தடுப்பு பணியில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, கட்டுப்படுத்தி தீர்வுகாண வேண்டிய அரசு குழப்பத்தின் உச் சத்தில் ஆழ்ந்துள்ளது. காலையில் ஓர் அறிவிப்பு, பின்னர் மாலையில் அதனை மறுத்து மற்றொரு அறிவிப்பு, இரவில் இரண்டையும் மறுத்து 3வது அறிவிப்பு என வெளியிட்டு அரசு தானும் குழம்பி மக்களையும் குழப்பி விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாவதால் மண்டலத் திற்கு ஒரு அதிகாரி என நியமிக்கப்பட்டனர். அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டது. சிறப்பு அதிகாரியாக டாக்டர். ராதாகிருஷ் ணன் நியமிக்கப்படுகிறார். இவைகள் அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்த அரசுநுண் செயல்திட்ட சிறப்பு ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரிநியமிக்கப்படுகிறார்.இதற்கிடையில் சென்னை மாநகர ஆணையர், “ஒருவருக்கு நோய் தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட் டால், அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ள அத்துனை பேரும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்” என்று அறிவிக்கிறார்.இந்த செய்தியை அடுத்த நாள் சிறப்பு அதிகாரி மறுத்து பேசுகிறார். கொரோனா நோய் தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண் ணிக்கை மறைக்கப்படுவதாக அரசின் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு விசாரணை குழு அமைத்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் அறிவிக்கிறார். உடனடியாக அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை செயலாளர் அதிரடியாக று துறைக்கு மாற்றப்படுகிறார்.

இந்த தலைச் சுற்றும் குழப்பத்தில் டாக்டர். ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்படுகிறார். கொரோனா நோய் தொற்று வெளிப்பட்ட ஆரம்பக் காலத்திலிருந்தே இன்று வரை தீர்க்கமாக எந்த ஒரு முடிவையும் அரசால் துணிவாக எடுத்து நிறைவேற்ற முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருப் பதை நிகழ்ச்சி போக்குகள் வெளிப்படுத்துகின்றன.மார்ச் முதல் ஜூன் வரை ஏற்பட்டுள்ள பாதிப்பை, உயிர் இழப்பை கவனத்தில் கொண்டு,  முதல் அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல் படமுன்வரவேண்டும்.சென்னையில் வீடு, வீடாக சென்று மருத் துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, பாதிக் கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திடவும், மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;