tamilnadu

img

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

சென்னை:
கொரோனா இரண்டாவது அலையால்தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 10 சனிக் கிழமையன்று மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், அ. சவுந்தரராசன், உ. வாசுகிமற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள்கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த கொடும் நோய்த் தொற்றின்இரண்டாவது அலை இளம் தலைமுறையினரையும் மோசமாக பாதித்து வருகிறது.இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1 லட்சத் திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக் கப்பட்டு வருகின்றனர். கடந்த 45 நாட்களில் சென்னையில் மட்டும் கொரோனா பரவல்10 மடங்கு அதிகரித்துள்ளதாக மாநகராட்சிஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்திடுக!
இரண்டாவது அலை என்பது இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக கண்டறியப் பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு மேற் பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு தடுப்பூசிஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டில் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்து உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். தற்போதுபோதுமான அளவு தடுப்பூசி கை வசம் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களின் ஒரு பகுதியினருக்கு இருக்கும் தயக் கத்தைப் போக்க உரிய விழிப்புணர்வு நடவடிக்கையை எடுக்க வேண்டும். முகக் கவசம், கைகளை சுத்தப்படுத்துதல், தனி மனிதஇடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும்.ஆர்.டி., பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகளின் அடக்கவிலை ரூ.200- அளவுக்குகுறைந்துள்ளது. ஆனால் பரிசோதனைக் கட்டணம் ரூ. 1500- வரை வசூலிக்கப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும். கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப் பட வேண்டும்.அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்திட வேண்டும். கல்லூரிகள், திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றிட வேண்டும். இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;