tamilnadu

உயர் மின் கோபுரங்கள் அமைப்பு: விளைநிலங்கள் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்குக

திருப்பூர், ஜூன் 15- திருப்பூர் மாவட்டத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால் விளைநிலங் கள் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உயர்ந் தபட்ச இழப்பீடு கணக்கீட்டு வழங்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணக் குமாரை சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று காலை 11 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணக்கு மாரை சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனி சாமி, மாவட்டக் குழு உறுப்பினர்  பி.துரை சாமி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இம்மனுவில் கூறியிருப்பதாவது: திருப் பூர் மாவட்டத்தில் பவர்கிரிட் நிறுவனமும், மின் தொடரமைப்புக் கழகமும், தனியார் மின் நிறுவனங்களும் பல்வேறு உயர் மின் திட்டங்களை அமல்படுத்துகின்றனர். இதற் காக விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படு கின்றன. இதில் விளைந்த பயிர்கள், கட்டி டங்கள், கிணறு உள்ளிட்டவை பாதிக்கப்ப டுகின்றன. எனவே நியாயமான இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும்.  குறிப்பாக கோவை மாவட்டத்தில் இதே திட்டங்களில் பாதிக்கப்படும் விவசாயிக ளுக்கு அதிகபட்ச இழப்பீடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆனால் இங்கு நிலம், பயிர் ஆகி யவற்றுக்கு ஒரே வருவாய் கிராமத்தில் வெவ் வேறு நில உரிமையாளர்களுக்கு பாரபட்ச மாகவும், குறைவாகவும் இழப்பீடு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. எனவே, நியாயமான இழப்பீடு கணக்கீட்டு வழங்கும்படி விவசா யிகள் பல முறை முறையிட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கடந்த நவ.மாதம் கோவை கணக்கீட்டு முறையை இங்கும் பின்பற்றி உரிய இழப்பீடு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தும் இது வரை அமலாக்கவில்லை. அதேசமயம் காவல்துறை பாதுகாப்புடன் சிறு விவசாயி களை மிரட்டி இத்திட்டம் பணிகளை மேற் கொள்ள முயற்சி செய்கின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்பட வில்லை. எனவே கோவை மாவட்டம் போல் இங் கும் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசா யிகள் கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்தி யுள்ளனர்.

;