tamilnadu

img

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் மோசடி!

புதுதில்லி:
நாட்டில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள குடும்பங்களின் நலனுக்காக என்ற பெயரில், ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற திட்டத்தை மத்திய பாஜக  அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. பணம் செலவழிக்கத் தேவையில்லாத மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்றும், இந்த திட்டத்தில், இதுவரை 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் அண்மையில் கூட மோடி அரசு தம்பட்டம் அடித்திருந்தது.‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, சுமார் 18 ஆயிரம் மருத்துவமனைகள் முன் வந்துள்ளதாகவும், இதுவரை மக்களின் சிகிச்சைக்காக ரூ. 7 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமலேயே - ஆனால் அளித்ததாக கூறும் 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கும், இல்லாத மருத்துவமனைகளின் பெயரிலும் பல கோடி ரூபாயை மோடி அரசு வாரி இறைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக 376 மருத்துவமனைகளிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 338 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், 6 மருத்துவமனைகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் மற்றும் சில மருத்துவமனைகளுக்கு ரூ.ஒன்றரைக் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் இணைந்திருந்த 97 மருத்துவமனைகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன என்றும், மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறியுள்ளார்.

;