tamilnadu

img

மாதர் சங்க அகில இந்திய மாநாடு மும்பையில் இன்று துவங்குகிறது

மும்பை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 12ஆவது அகில இந்திய மாநாடு டிசம்பர் 27 (இன்று) மும்பையில் எழுச்சியுடன் துவங்குகிறது. டிசம்பர் 30 வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டின் துவக்கமாக வெள்ளியன்று மும்பை பைக்குல்லாவில் உள்ள ராணி பவுக் மைதானத்தில் மாபெரும் பேரணி - பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 

இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெறும் பொது மாநாட்டில் சங்கத்தின் கொடியை அகில இந்தியத் தலைவர் மாலினி பட்டாச்சார்யா ஏற்றி வைக்கிறார். மாநாட்டை துவக்கி வைத்து மாதர் சங்கத்தின்புரவலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிருந்தா காரத் உரையாற்றுகிறார். நாடு முழுவதுமிருந்து 500க்கும் மேற்பட்டபிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில் வங்கதேச மகிளா பரிசத் துணைத் தலைவர் டாக்டர் பௌசியா மொஸ்லம் உள்ளிட்ட சகோதர சங்கங்களின் தலைவர்களும் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, பொருளாளர் பி.கே.ஸ்ரீமதி, துணைத் தலைவர்கள் சுதா சுந்தரராமன், உ.வாசுகி உள்பட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கீழ் பெண்கள் மீதான வன்கொடுமை குற்றங்கள், கொடியத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன; பெண்களை அடிமைகளாக மாற்றும் கொடிய மதவெறிப் பிடித்த இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதையே தங்களது அடிப்படை நிகழ்ச்சி நிரலாக கொண்டு ஆட்சி நடத்துகிற மோடி அரசின் முகத்திரையை கிழித்தெறியும் விதத்திலும், பெண்களுக்கெதிரான இந்த ஆட்சியை அம்பலப்படுத்தும் விதமாகவும், வீறுகொண்ட போராட்டங்களை இம்மாநாடு திட்டமிடவுள்ளது.

;