tamilnadu

img

கொரோனா தாக்குதல்... இங்கிலாந்தில் இந்திய மருத்துவர் உயிரிழப்பு 

லண்டன் 
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவை மையம் கொண்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள முக்கிய வளமிக்க பகுதியான பிரிட்டனும் கொரோனா தாக்குதலில் அதிக சேதாரத்தைச் சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 55,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பிரிaட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், இங்கிலாந்து வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணராகப் பல ஆண்டுகள் பணியாற்றி வந்த ஜிதேந்திர குமார் ரத்தோட் திடீர் உடல்நலக் குறைவால் கார்டிப் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொழுது அவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.  இந்த தகவலை வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இந்திய வம்சாவளியான ஜிதேந்திர குமார் ரத்தோட் மும்பையில் மருத்துவம் பயின்று 1995-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;