weather

img

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்....

சென்னை:
தமிழகத்தில் திங்கட்கிழமை  பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து  அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

 வடதமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரியில்  திங்கட்கிழமை (ஆக.30)  கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம். தமிழகத்தில் திங்கட்கிழமை பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்.செப்டம்பர் 1, 2 ஆகிய 2 நாட்களில் வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரள- கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;