games

img

115 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி  

115 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.  

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் மற்றும் கடைசி போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களும், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 123 ரன்கள் முன்னிலையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.  உஸ்மான் கவாஜா 104 ரன்களும் வார்னர் 51 ரன்களும் எடுத்தார்கள். இந்தத் தொடரில் 3 டெஸ்டுகளில் இரு சதங்கள், 2 அரை சதங்களுடன் 496 ரன்கள் எடுத்துள்ளார் கவாஜா.  

3ஆவது டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்ற பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்தனர்.  

இந்தநிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 278 ரன்கள் தேவைப்பட்டன. ஆஸ்திரேலிய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை.  

அதன்படி இன்று நடைபெற்ற 5 ஆவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விக்கெட்டை இழந்தது.  இமாம் உல் ஹக் 70 ரன்களும், பாபர் ஆஸம் 55 ரன்களும் எடுத்தாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 2 ஆவது இன்னிங்ஸில் 92.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  

இந்த வெற்றியால் 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

;