science

img

ககன்யான்: கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், முதற்கட்டமாக கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் LVM3 ராக்கெட்டை உந்தி தள்ளுவதற்கு கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுகிறது. கடந்த 13-ஆம் தேதி சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை நடத்தப்பட்டது. இதில் இன்ஜினின் செயல்திறன், அதிகபட்ச தாக்குப்பிடிக்கும் திறன், உந்து சக்தி உள்ளிட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த இன்ஜின் குறைந்தபட்சம் 6350 நொடிகள் இயக்கப்பட வேண்டும். ஆனால் சோதனையில், 8810 நொடிகளில் வெவ்வேறு காலநிலைகளில் சிறப்பாக இயங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டாம் காலாண்டில் ஆளில்லா ககன்யான் விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்படுகிறது. அதில் இந்த என்ஜின் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;