science

img

ரத்தச் சோகை தனி மனிதன் பிரச்சனை மட்டுமல்ல - மரு., தெ.வெண்மணி எம்.டி., (ஹோமியோ), மருத்துவ அலுவலர், ஆயுஷ் துறை, கொல்லம், கேரளம்.

இரத்தச் சிவப்பணுக்கள் உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குகின்றன. சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறைவதால் அல்லது சிவப்பணுக்கள் அதிகமாக அழிக்கப்படுவதால் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவதால் அனீமியா அதாவது ரத்தச் சோகை ஏற்படுகிறது. இரும்புச் சத்து உயிர்ச்சத்து குறைபாடுகளின் இரத்தச் சோகை என்பது மிகவும் பொதுவான வகையாகும். 

இரத்தச் சோகை என்பது ஒரு நோயல்ல. அனீ மியா இதர நோய்களுடன் தொடர்புடைய மருத் துவ நிலைக்கான பார்வையை அளிப்பதாகும். அதிகச் சோர்வு மற்றும் ஆற்றல் இழப்பு, உள வியல் சமநிலையின்மை (Psychological imba lance), மனச்சோர்வு (Depression), சில கடுமை யான சந்தர்ப்பங்களில் அதிகரித்த இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல், குறைந்த இரத்த அழுத்தம், விரைவான சுவாசம், கால்கள் மற்றும் கைகளில் உணர்வின்மை போன்ற பல்வேறு அறிகுறிகள் இதன் விளைவாக தோன்றுகின்றன. ஹோமியோபதி மருத்துவம் இரத்தச் சோகைக்கு முழுமையான தீர்வை அளிக்கிறது. இயற்கையான ஹோமியோபதி மருந்துகள் எந்த வித பக்க விளைவுகளும் அற்றவை என்பதுடன் ரத்தச் சோகையை அறவே நீக்குகின்றன. எளிமை யாக குணப்படுத்தக்கூடிய ரத்தச் சோகைக்கு ஏராளமாக செலவழித்து மிக அதிக மருந்துகளை உட்கொண்டு வேறு பல சிக்கல்களுக்கு ஆளாகி  இறுதியில் மாற்று மருத்துவத்திற்கு வரும் நோயா ளிகள் இப்போது அதிகரித்து வருகின்றனர். இவைகளில் ஹோமியோபதி மலிவான நிரந்தர மான எல்லா நாடுகளிலும் பின்பற்றத்தக்க அறி வியல் பூர்வமான சர்வதேச தீர்வாகும். இரத்தச் சோகையின் வகைகளை பின்வரு மாறு பட்டியலிடலாம். வைட்டமின் பி12 குறை பாட்டினால் ஏற்படும் இரத்தச் சோகை, ஃபோலேட்  (ஃபோலிக் அமிலம்) குறைபாடு காரணமாக இரத்தச் சோகை, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்தச் சோகை, நாள்பட்ட நோயின்  இரத்தச் சோகை, ஹீமோலிடிக் அனீமியா இடியோ பாடிக் அப்லாஸ்டிக் அனீமியா மெகாலோ பிளாஸ்டிக் அனீமியா, ஆபத்தான இரத்தச் சோகை (Pernicious anemia-நோய் எதிர்ப்புத்  திறன் குறையும்) சிவப்பு அணுக்கள் கடினமாக வும், அரிவாள் வடிவமாகவும் மாறும் அரிவாள் செல் இரத்தச் சோகை, தலசீமியா அனீமியா 

அனீமியாவிற்கான  ஹோமியோபதி மருந்துகள் 

பெரம் மெட்டாலிகம் பொதுவாக இரத்தச் சோகைக்கான சிறந்த ஹோமியோபதி மருந்து ஆகும்.. அலெட்ரிஸ் ஃபரினோசா சைனா போன்ற  மருந்துகள் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்குக்கு பிறகு ஏற்படும் சோகைக்கான சிறந்த ஹோமியோபதி மருந்துகளாகும். நாட்ரம்  முர்: இரத்தச் சோகைக்கு பிறகு ஏற்படும் எடை  குறைப்பிற்கு சிறந்த ஹோமியோபதி மருந்து களில் ஒன்று. ஃபெர்ரம் பாஸ் ஒரு ஹீமோ குளோபின் அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து ஆகும். தீங்கு விளைவிக்கும் இரத்தச் சோகைக்கான ( Pernicious anemia) சிறந்த ஹோமியோபதி மருந்துகள் பிக்ரிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் ஆகும்.  ஆர்சனிக் ஆல்பம், நேட்ரம் முர் மற்றும் அல்ஸ்டோனியா ஸ்காலரிஸ் ஆகியவை மலேரியாவால் ஏற்படும் இரத்தச் சோகைக்கான திறமையான இயற்கை ஹோமியோபதி மருந்து களாகும். அலுமினா, நக்ஸ் வோமிகா மற்றும்  கால்கேரியா ஃபோஸ் ஆகியவை ஊட்டச் சத்துக் குறைபாடுகளால் ஏற்படும் இரத்தச் சோகைக்கான அற்புதமான இயற்கை ஹோமி யோபதி மருந்துகள்.பெர்ரம் பாஸ் மற்றும் அலட்ரிஸ் மற்றும் ஃபரினோசா ஆகியவை கர்ப்ப  காலத்தில் ஏற்படும் இரத்தச் சோகைக்கான ஹோமியோபதி மருந்துகளாகும். பொதுவாக உணவல்லாத பொருட்களை சாப்பிடுவது பிகா  எனப்படும் ஒரு வகை கோளாறு ஆகும்,. சிறு  குழந்தைகள் உணவு அல்லாத புல், பலப்பம் மண் போன்றவற்றை வாயில் வைக்கிறார்கள். அலுமினா மற்றும் கால்கேரியா கார்ப் ஆகிய ஹோமியோபதி மருந்துகள் பிகாவைக் கட்டுப் படுத்தவும் இரத்தச் சோகைக்கும் கொடுக்கலாம். ஃபெரம் மெட் மற்றும் நாட்ரம் முர் மருந்துகள் ஆகியவை இரத்தச் சோகையின் படபடப்பை குணமாக்கும். ஃபெர்ரம் மெட், சைனா மற்றும்  நாட்ரம் முர் ஆகிய ஹோமியோபதி மருந்துகள்  இரத்தச் சோகை நோயாளிகளின் பலவீனத்திற்கு  சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஹீமோகுளோபின் குறைவினால் வரக் கூடிய இரத்தச் சோகைக்கு அதிசயங்களைச் செய்யும் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. 

இரத்தச் சோகைக்கான  மருத்துவமும் நமது கடமையும்    

பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நோயாளி களை பரிசோதித்து அவர்களோடு பேசி நோயின்  தன்மைக்கேற்ப மருந்துகளையும் அளவையும் மருத்துவர்தான் நிர்ணயிக்க முடியும் .என்பதால் அருகில் உள்ள தகுதி பெற்ற ஹோமியோ மருத்து வரை அணுக வேண்டும். நோய் நாடி அதன் முதல்  நாடி என்பது மகத்தான மருத்துவம் மற்றும் வாழ்வி யல் மொழியாகும். ஹோமியோ மருத்து வர்கள் நோயாளிகளுடன் அதிக நேரம் செல வழிக்கின்றனர். நோயாளிகளின் இயல்புகள் மன நிலை குடும்ப நல வரலாறு ஆகியவற்றை கேட்ட றிந்து நோய்களின் தன்மையை இறுதி செய்கி றார்கள். முடிவில் மருந்துகள் மற்றும் அளவை  தீர்மானிக்கிறார்கள். மருத்துவர்கள் நோயாளி களுடன் ஆறுதல் அளிக்கும் வகையில் உரையாடுவதும் எதுவும் சாத்தியம் எந்த நோயை யும் குணமாக்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கை யை நோயாளிக்குள் தோற்றுவிக்கும் உளவியல் நிபுணராகவும் ஹோமியோ மருத்துவர்கள் பணி யாற்றுகின்றனர். பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையம் (National Center for Biotechnology Information) என்னும் சர்வதேச அமைப்பு நாள் பட்ட மனநோயாளிகளில் இரத்தச் சோகையின் பொது முறை நிகழ்வு (Frequency of anemia in chronic  psychiatry patients) என்னும் ஆய்வுக் கட்டுரை யை வெளியிட்டிருந்தது. அதன் ஒருகுறிப்பிட்ட குழு  ஆய்வில் 35% மன நோயாளிகளிலும், 22% மனச் சோர்வு நோயாளிகளிலும், 25% இருமுனைக் கோளாறு நோயாளிகளிலும் இரத்தச் சோகை கண்ட றியப்பட்டது. ஒட்டு மொத்தமாக 35 சதவீத பெண்  மனநோயாளிகளில் ரத்த சோகை கண்டறியப்பட் டுள்ளது.இதன் பொருள் அனீமியாவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்பதாகும்.  நாம் வாழும் ஆணாதிக்க சமூகத்தில் இப்பெண் களின் குடும்பத்தார் குறிப்பாக கணவன், உடன்  பிறந்தார் அப்பெண்களின் உணவுத் தேவை களை,

உடல் நலத்தை கவனிப்பதில்லை. அனீமியா வால் பாதிக்கப்படும்போது உணர்வு ரீதியாக தனி மைப்படுத்தும் பரிதாபகரமான போக்கு இன்றும் நிலவுகிறது. இதுதான் பெண்களை உளவியல் கோளாறுகளுக்கும் ஆளாக்குகிறது. இது அறி வற்றது மட்டுமல்ல, இரக்கமற்றதும்கூட. குடும்பத் தில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை நாம்  உருவாக்கிக் கொள்ள வேண்டும். மனைவி என்ன  சாப்பிடுகிறாள் என்பதை கணவனும், தங்கை தாய்  என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அண்ணன்மார் களும், மகன்களும் கவனிக்க வேண்டும். இது பல பாதிப்புகளுக்கு தீர்வாக அமையும். குடும்பத்தின் வாழ்வியல் முறையை புத்திசாலித்தனமாக மாற்றி அமைத்துக்கொள்வது இரத்தச் சோகையின் பாதிப்புகளை, உளவியல் கோளாறுகளை அதி சயக்கத்தக்க அளவில் குணமாக்கும்.  அதே சமயத்தில் இரத்தச் சோகைக்கான முறை யான சிகிச்சை மனக் கோளாறுகளுக்கான சிகிச்சை களை வெற்றிகரமாக மாற்றும். பொதுவான இரத்தச்  சோகைக்கு ஹோமியோ மருந்துகளுடன் இரும்புச்  சத்து, ஃபோலேட், வைட்டமின் பி12, வைட்டமின்  ஏ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் புரோட்டீன் நிறைந்த  உணவுகளை கொடுக்க வேண்டும். குறிப்பாக 150  கிராம் அளவுள்ள புளிச்சக்கீரை அல்லது வெந்தயக்  கீரை அல்லது முருங்கைக்கீரை இம்மூன்றில் ஒன்றை மாற்றி ஒன்று என ஏதேனும் ஒரு கீரை யை தினசரி தேங்காய், வெங்காயம், மிளகு, சீரகம்  கொண்டு சூப் செய்து உட்கொள்ளுவது அனீமியா வை ஒழித்துக் கட்டும். 

இரத்தச் சோகையின்  சமூக பொருளாதார விளைவுகள்

பெண்களுக்கான இரத்தச் சோகை என்பது குறிப்பிடத்தக்க ஒரு பொது சுகாதாரப் பிரச்சனை  என்பதோடு, இதற்குள் நாட்டின் பாதிப்பை ஏற்  படுத்தும் அரசியலும் உள்ளது. அனீமியாவால் அறி வுத்திறன், வேலை திறன் பாதிக்கப்படுகிறது. சில வகை அனீமியாக்கள் உளவியல் சமநிலையின்மை (Psychological imbalance) மனச்சோர்வு (Depression) போன்ற மனக்கோளாறுகளை உரு வாக்குகின்றன எனக் கூறினோம். சில வகை அனீ மியா பாதிப்புகள் உள்ளானவர்கள் தொடர்பில்லா மல் பேசுவதும் பதற்றமடைவதும் குறிப்பிட்ட திசை யில் நிர்ணயிக்க முடியாத தொலைவில் காதொலி கள் கேட்கிறது என கூறக்கூடும். அனிச்சையாக உடல் இயக்கங்கள் உளவியல் கோளாறுகளாக தோன்றக்கூடும். இந்த உடல் சார்ந்த பிரச்சனை களுக்காக இந்திய நகரங்கள், கிராமங்களில் அனீ மியாவால் பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு சாமியார்கள், சாமியாடிகள் வீடுகளின்  வாசல்களில் காத்துக்கிடக்கும் கூட்டம் நிற்பதையும் மூட நம்பிக்கைகள் தலைவிரித்தாடுவதையும் இன்றும் காண முடியும். முறையான வைத்தியமும் தேவையான சத்துக்கள் நிரம்பிய உணவு முறை யும் குடும்பத்தாரின் அன்பான ஆதரவான அர வணைப்பும் அனீமியா பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும்.  பொது சுகாதார நலக்கல்வியில் இந்தியாவி லேயே கேரளா சிறந்து விளங்குவதால் . குறை வான வீதத்தில், அதாவது இந்திய சராசரி 57% ஆக  இருக்கும்போது கேரளாவில் மட்டும் 32.5 % ஆக  உள்ளது. இதில் கேரள பெண்களின் 100 சத அறி வியல் சார்ந்த கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே சமயத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் குஜ ராத், ஹரியானா, அசாம், மத்தியப்பிரதேசம், உத்த ரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட  மூட நம்பிக்கைகளில் ஊறிக்கிடக்கும் வட மாநி லங்களில் முறையே 65%, 60.4%, 65.9%, 54.7%, 50.4%,  54.4%, 54.2% ஆக பெண்களின் ரத்தச்சோகை உள்  ளது. இம்மாநிலங்களில் பெண் கல்வி ஒப்பீட்டள வில் மிக மோசமாக இன்றளவும் உள்ளது. பெண்  களில் இரத்தச் சோகை மற்றும் அறிவியல் சார்ந்த  கல்வி அறிவு மிக மோசமாக உள்ள இம்மாநி லங்களில்தான் பழமைவாத, மதவாத உணர்வுகள் தலைவிரித்தாடுவதை நாம் பார்க்கிறோம்.  நமது மக்கள் தொகையில் சரி பாதி பெண்களாக உள்ளனர். இந்நிலையில் எதையும் பகுத்தாய்வு செய்யவியலா பரிதாபமும், இவர்களின் அரசியல் அறியாமையும் இந்திய அரசியலில், இந்திய தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கிறது. இது உருவாக்கும் நாசகரமான விளைவுகளை இன்று நாம் சந்தித்து வருகிறோம். அனீமியா அல்லது ரத்தச் சோகை தனி  மனிதன் பிரச்சனை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டு மொத்த வீழ்ச்சியையும், வளர்ச்சியையும் உரு வாக்குவது. குடும்ப உறவுகளி்ல் அன்பால் இணை வோம். குடும்பமாய் சேர்ந்து உண்போம். தகுதி வாந்த ஹோமியோ மருத்துவ நிபுணர்களைக் கொண்டு எதிர்படும் அனீமியா உள்ளிட்ட நோய் சவால்களை வெல்வோம்.

 

;