tamilnadu

img

மே 1 வரை உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

சென்னை, ஏப்.27- தமிழகத்தில் அடுத்த 4 நாட்க ளுக்கு வெப்ப நிலை மேலும் அதி கரிக்கும் என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறிப்பாக, தமிழக உள் மாவட்டங்களில் மே 1 வரை, இயல்பை விட வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை  அதிகரிக்கும், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை வட  தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையும், இதர  தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை யும் இருக்கக்கூடும்.

குறிப்பாக ஏப்ரல் 30 அன்று கடுமையான வெப்ப அலை வீசு வதற்கான மஞ்சள் நிற எச்சரிக்  கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அன்றைய தினம் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால்  நண்பகல் நேரங்களில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே  செல்ல வேண்டாம். வெப்ப அலை வீசும் நேரங்களில் அசவு கரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு  இருப்பதால் பொதுமக்கள் வீடு களை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது என்றும்  வானிலை ஆய்வுமையம் அறி வுறுத்தியுள்ளது.

ஏப்.27 அன்று ஈரோடு, திருப்  பத்தூர், சேலம், நாமக்கல், வேலூர், திருத்தணி உள்பட சுமார் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது.

ஈரோட்டை பொறுத்தவரை தொடர்ந்து 6-வது நாளாக 108 டிகிரியை பதிவாகி வருகிறது. சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி பதிவாகி வருகிறது. இதனால் சென்னை யில் வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளது. 

;