districts

திருச்சி முக்கிய செய்திகள்

முன்னாள்  படைவீரர்கள் கவனத்திற்கு...

தஞ்சாவூர், ஏப்.16-  ஏப்.19 அன்று நடக்கும்  நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட முன்னாள் படைவீரர்கள் ஈடு படுத்தப்படவுள்ளனர். இப்பணிக்காக தங்க ளது பெயர்களை ஏற்க னவே பதிவு செய்துள்ள மற்றும் இப்பணியில் ஈடு பட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் ஏப்.18 அன்று காலை 8 மணி யளவில் தஞ்சாவூர் பழைய நீதிமன்ற சாலை யில் உள்ள ஆயுதப் படை மைதானத்திற்கு தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்கா ளர் அடையாள அட்டை யுடன் நேரில் ஆஜராகு மாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்து துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி

தஞ்சாவூர், ஏப்.15 -  புதுக்கோட்டை மாவட்டம் ஆதனூர் பகுதி யைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (37). இவர்  திருச்சியில் உள்ள ஒன்றிய அரசு நிறுவன மான துப்பாக்கி தொழிற் சாலையில் பணியாற்றி வந்தார்.   இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யில் தனது உறவினர் ஒரு வரின் துக்க வீட்டுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு, மீண்டும்  திருச்சிக்கு சென்றார். அப்போது, தஞ்சாவூர்  அருகே கீழவஸ்தாசாவடி யில் தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராதா கிருஷ்ணன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், அங்கு சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர்  தாலுகா காவல்துறை யினர் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

அரிய வகை ஆமைகளை மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், ஏப்.16-  மீனவர்களின் வலைகளில் சிக்கிய ஆமைகளை மீட்டு, மீண்டும்  கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத் துறையினர் பாராட்டு தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக் கோட்டை வடகாடு முதல் குப்பத்தே வன் கிராமம் வரை 45 கிலோ  மீட்டர் நீளத்துக்கு, 32 மீனவ கிரா மங்கள் உள்ளன. இந்த கிராமங் களில் உள்ள ஆயிரக்கணக்கான மீன வர்கள், விசைப்படகு, நாட்டுப்படகு மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்று  வருகின்றனர். இந்நிலையில் கடலில் உள்ள அரிய வகை உயிரினங்களான கடற்பசு, ஆமைகள், கடல் அட்டை கள் உள்ளிட்ட உயிரினங்கள் மீன வர்களின் வலைகளில் சிக்கினால் அவற்றை மீண்டும் கடலில் விடுமாறு  மாவட்ட வனத்துறையினர் அவ்வப் போது மீனவர்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு நாட்க ளுக்கு முன்பு மல்லிப்பட்டினம் கடற் கரைப் பகுதியில், சின்னமனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பால முருகன், சுரேஷ், சத்யராஜ் ஆகி யோர் படகில் மீன் பிடித்தபோது அவர்களது வலையில் சுமார் 5 கிலோ எடை கொண்ட அபூர்வ வகை  கடல் ஆமை சிக்கியது. மீன் வலையை கரைக்கு கொண்டு வந்து  பார்த்தபோது, அதில் ஆமை இருந்தது  தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆமையை மீனவர்கள் மீண்டும், கடலில் விட்டனர். அதே போல், சோம நாதன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ், கமல், வீரமணி,  சூர்யா, அண்ணாநகர் புதுத்தெரு வைச் சேர்ந்த மதன்ராஜ், முத்து ராஜா, புதுப்பட்டினம் மீனவ கிரா மத்தைச் சேர்ந்த ஜான், பால்சாமி, சக்தி ஆகியோரது வலைகளிலும் ஆமைகள் சிக்கின. இந்த ஆமை களை மீட்டு மீண்டும் கடலில்  விட்டனர். இதுகுறித்து வனத்துறை யினருக்கு வீடியோ எடுத்து அந்த தகவலை பகிர்ந்து கொண்டனர்.  இதையடுத்து பட்டுக்கோட்டை வனச்சரகர் சந்திரசேகரன் கூறுகை யில், “தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் மத்தி யில் அரியவகை கடல் உயிரினங்களை  பாதுகாப்பது தொடர்பாக வனத் துறை மூலம் விழிப்புணர்வை ஏற்ப டுத்தி வருகிறோம். அதன்படி இரு தினங்களுக்கு முன்பு கடலில் உள்ள ஆமைகள் மீனவர்களின் வலை யில் சிக்கி, அதனை மீட்டு மீண்டும் கடலில் விட்டதை வீடியோ எடுத்து அனுப்பினர். இவர்களுக்கு வனத்துறை சார்பாக அடுத்த மாதம் நடைபெற உள்ள கடற்பசு தினத்தில், ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்படவுள்ளது” என்றார்.

பாபநாசம் வழியே  தேர்தல் கால சிறப்பு ரயில் இயக்கம்

பாபநாசம், ஏப்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச்  செயலர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை எழும்பூர் - கோவை இடையே (வண்டி எண்:06003/06004) கும்ப கோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் வரை தேர்தல் கால சிறப்பு ரயில்  இயக்கப்படுகிறது. ஏப்.18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில்  இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு இரவு 11.30 மணிக்கும், பாபநாசத்திற்கு 11.45 மணிக்கும் வரும்  இச்சிறப்பு விரைவு ரயில், பழனிக்கு காலை 6 மணிக்கும் பொள்ளாச்சி வழியாக கோவைக்கு காலை 8.20 மணிக்கும்  சென்று சேரும்.  மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து ஏப்.19 மற்றும் 21  தேதிகளில் இரவு 8.40-க்கு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக பழனிக்கு இரவு 11 மணிக்கும், பாபநாசத்திற்கு அதிகாலை  3.05 மணிக்கும், கும்பகோணத்திற்கு 3.25 மணிக்கும் வந்து,  காலை 10.25 மணிக்கு சென்னை சென்றடையும்.  இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க அதிக வாய்ப்புள் ளதால், பழனி திருக்கோயில் மற்றும் பொள்ளாச்சி பகுதி களுக்கு செல்லும் பயணிகள் இதை அதிகளவில் பயன்படுத் திக் கொள்ள வேண்டுகிறோம்.இந்த சிறப்பு விரைவு ரயில்  இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும்.  முன்பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

கார் - மினி லாரி மோதல்:  பள்ளி ஆசிரியர், ஓட்டுநர் பலி

தஞ்சாவூர், ஏப்.16 -  தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை காரும்,  மினி லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி ஆசிரியர்,  ஓட்டுநர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் அண்ணா நகர் சிவாஜி நகர் மேற்கு பகுதி யைச் சேர்ந்தவர் கிருபா பொன்செல்வன் (34). இவர் தஞ்சா வூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணி யாற்றி வந்தார். இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு  செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந் தார்.  வல்லம் அருகே சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பகுதியில்  வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுத் திட்டு மீது ஏறி எதிர் திசைக்குச் சென்று, எதிரே நாகையி லிருந்து திருச்சி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த  மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிருபா பொன் செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மினி லாரி ஓட்டுநரான காரைக்கால் திருநகரைச் சேர்ந்த நெடுஞ்செ ழியன் (32), அவருடன் வந்த காரைக்கால் அம்பாசமுத்திரம்  ஏரி பகுதியைச் சேர்ந்த மேத்யூ (26) ஆகியோர் தஞ்சாவூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன் உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி 

தஞ்சாவூர், ஏப்.16-  பேராவூரணி ஒன்றியத்தில் புஷ்கரம் வேளாண் கல்லூரி  மாணவர்கள் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம் பலத்தில் உள்ள பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைந்த புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள், அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் துரைசெல்வத்திடம் கலந்துரையாடி பயிற்சி பெற்றனர்.  அங்கு 1,100 தென்னை விவசாயிகள், உழவர் உற்பத்தி யாளர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களிடம் கொப்பரை  தேங்காய் தேர்வு, எண்ணெய் பிரித்து எடுத்தல் மற்றும் மதிப்பு  கூட்டல் போன்றவற்றை அறிந்து கொண்டனர். மேலும், மாண வர்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் துரைசெல்வம் வழங்கினார்.

தமிழ்மொழி மீதான பாஜகவின்  அக்கறை வெறும் வார்த்தை ஜாலமே!

பாபநாசம், ஏப்.16- பாஜக தமிழ்மொழி மீது அக்கறை  உள்ளது போன்று காட்டிக் கொள்வது  வெறும் வார்த்தை ஜாலமே என மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவா ஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழ் மொழியின் மாண்பை அதிகரிக்க அனைத்து முயற் சிகளும் எடுக்கப்படும் என அறிவித் துள்ளது. இது வெறும் வார்த்தை ஜாலமே தவிர, வேறில்லை என மனித நேய மக்கள் கட்சி கருதுகிறது. ஒவ்வொரு முறையும், மோடி தமிழ் நாட்டிற்கு வரும்போது தமிழ் மக்கள்  மீதும், தமிழ் மொழி மீதும் மிகவும் அக்கறை உள்ளது போன்று மேடை யில் பேசிவிட்டு, தில்லிக்குச் சென்றவு டன், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என  பேசி வருவதைத் தமிழ்நாட்டு மக்கள் அறியாமல் இல்லை. மூடப்பட்ட தமிழ்த் துறைகள் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் யோச னையின் அடிப்படையில், நாட்டின்  முக்கியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழிக்கான துறை துவக்கப் பட்டது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா, கான்பூர், மீரட், பஞ்சாப்பின் ஜலந்தரிலும் தமிழ் மொழித் துறை இருந்தது. பிறகு மூடப்பட்ட இந்த தமிழ்த் துறைகளை திறக்க, பாஜக அரசிற்கு மனம் வர வில்லை. வெளிநாடுகளில் உள்ள தமிழுக் கான துறைகளில், ஜெர்மனியின் கொ லோன் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்  துறை உள்ளது. இது மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட போது, மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ் ஆர்வ லர்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு  அந்த இருக்கை செயல்பட ரூபாய்  ஒரு கோடி நிதி அளித்தார் தமிழ்நாட்டு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது  அந்த துறை மீண்டும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத னைக் காக்க பாஜக இதுவரை நிதி அளிக்கவில்லை. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறு வனம் சார்பில் பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டதாக மார்தட்டிக்  கொள்ளும் பாஜக அரசு, இதே நிறுவ னம் சார்பில் திட்டமிடப்பட்ட ஆசிய நாடு களின் பல்கலைக் கழகங்களுக்கான தமிழ் இருக்கைகளை துவக்க எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்மொழி மீது மிகுந்த அக்கறை உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் பாஜக விற்கு, இந்த நாடாளுமன்றத் தேர்த லில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தமிழ்ப் பல்கலை.யில்  முனைவர் பட்ட கருத்தரங்கம்

தஞ்சாவூர், ஏப்.16-  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஏப்.15, 16 (திங்கள், செவ்வாய்) ஆகிய இரு  நாள்கள்  முனைவர் பட்ட, முது நிலை மாணவர் கருத்தரங்கம் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறையின் சார்பில்  நடைபெற்றது.  தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் நிகழ்வைத் தொ டங்கி வைத்து உரையாற்றினார். பல்கலைக்கழக முதுகலைத் தொல்லியல் மாணவர்களும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் மாணவர்களும், புதிய தொல்லி யல் கண்டுபிடிப்புகள், இன வரைவியல் ஆய்வுகள் அடிப்ப டையிலான தங்களது கட்டுரை களை வாசித்தனர். குந்தவை நாச்சியார் கல்லூரியின் பணிப் பயிற்சி பெறும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.   மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழக மாணவி  ஆஸ்லின் காருண்யா, திரு நெல்வேலி தருவை அருகே  கண்டுபிடித்த 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த அணைக் கட்டுக் கல்வெட்டு “அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு”  என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இது மருதநாயகம் எனப்படும் யூசுப்கானைக் குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது என்றார்.  கருத்தரங்கின் தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக் கழக பதிவாளர் பேராசிரியர் சி.தியாகராசன், துறைத் தலை வர் முனைவர் வீ.செல்வகுமார்,  வருகைதரு பேராசிரியர் கி.இரா. சங்கரன், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர் கோ.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலி நகைகள் அடமானம்  ரூ.16.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது

தஞ்சாவூர், ஏப்.16- தஞ்சாவூர் தெற்கு வீதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில், பிப்ரவரி மாதம் அடமானத்துக்கு வந்த  நகைகளை மதிப்பீட்டாளர் சோதனை செய்தார். அப்போது,  25.32 பவுன் நகைகள் போலி என்பதும், அதை வைத்து சிலர் ரூ.9.71 லட்சம் கடன் பெற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து  மேற்கு காவல் நிலையத்தில் நிறுவன கிளை மேலாளர் எஸ். ராஜாராம் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  இதில், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலை அண்ணா காலனியை சேர்ந்த ஜெ.பிரபாகரன் (51), மன்னார்குடி அய்யப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.ரமேஷ் (51),  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியைச் சேர்ந்த எம்.ஜெய பால் (73) உள்பட 4 பேர் மோசடி செய்தது தெரிய வந்தது.  இதைத் தொடர்ந்து, பிரபாகரன், ரமேஷ், ஜெயபாலை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், தெற்கு வீதியிலுள்ள மற்றொரு தனியார் நிறு வனத்திலும் பிரபாகரன் 18 பவுன் போலி நகைகளை அட மானம் வைத்து ரூ.6.86 லட்சம் பெற்று மோசடி செய்தது விசா ரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அந்நிறுவன கிளை மேலாளர் சுதர்சன் அளித்த புகாரின் பேரில், மேற்கு  காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, பிரபாகரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி  வருகின்றனர்.

 

;