districts

img

பாஜக வெற்றி பெற்றால் வாக்குச் சாவடிகளே இருக்காது!

தஞ்சாவூர், ஏப்.16 -  இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சுங்கச்சாவடிகள் அகற்றப் படும்; மாறாக, பாஜக வெற்றி பெற் றால் வாக்குச் சாவடிகள் அகற்றப் படும் என அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி எச்சரித்தார். மதவாத அரசியலில் இருந்தும், ஊழல் அரசியலில் இருந்தும் மக்களை  காக்க, இந்தியா கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு வாக்குகள் கேட்டு,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யா மொழி, பேராவூரணி சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம் பலம், ஆவணம், பேராவூரணி நகரம்,  சொர்ணக்காடு கடைத்தெரு, நெல்லியடிக்காடு, பெருமகளூர், செந் தலை வயல், குருவிக்கரம்பை, மல்லிப் பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேக ரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசியதாவது: இந்தத் தேர்தல் ஒன்றிய அள வில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிற தேர்தல். தமிழக முதலமைச்சர் சொன்னது போல், இது வெறும் நாடாளுமன்றத் தேர்தல்  மட்டுமல்ல; இரண்டாவது சுதந்திரப் போர். இந்த போராட்டம் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கக் கூடிய போராட்டம்.  ஒன்றியத்தில் மோடி ஆட்சியில், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர்  விலை தற்போது ரூ.1200 என விற்கப் படுகிறது. இந்தியா கூட்டணி வெற்றி  பெற்று, ஆட்சிக்கு வரும்போது சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.  தற்போது ரூ.95, ரூ.105-க்கு விற்கப் படும் டீசல், பெட்ரோல் விலை ரூ.65,  ரூ.75-க்கு வழங்கப்படும். மோடி ஆட்சியில், பெட்ரோல் - டீசல் விலை  உயரும்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 100 டால ருக்கு விற்பதாகச் சொன்னார். தற்போது கச்சா எண்ணெயை 65 டாலருக்கு ரஷ்யாவிடம் விலை மலி வாக வாங்கும் போதும், பெட் ரோல்-டீசல் விலையைக் குறைக்கா ததற்கு காரணம் என்ன? இதன் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் யாருக்குப் போய்ச் சேர் கிறது. அம்பானி-அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு ரூ.16 லட்சம்  கோடி வாங்கிய கடனை தள்ளுபடி செய்த மோடி அரசாங்கம், ஏழை-எளிய மக்கள் என்று வரும்போது மட்டும் ஏன் இவ்வளவு யோசனை? ஒரு சில பெரிய முதலாளிகள் மட்டும்  நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிற மோடி அரசாங்கத்தை மாற்ற வேண்டிய நிலையில்தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.  காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், சொன்னது போல் மகாலட்சுமி திட்டத்தின்கீழ் ஏழை-  எளிய பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு  லட்சம் வழங்கப்படும். விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்கள், மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் எல்லாம் அகற்றப் படும். தப்பித் தவறி மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வாக்குச்சாவடிகள் எல்லாம் அகற்றப் படும். பிறகு தேர்தல் என்பதே இருக் காது. ஒரே சாதி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கட்சி என்ற நிலை ஏற்படும். இவ்வளவு நாள் கட்டி காத்த ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு, ஒற்றை ஆட்சி முறை கொண்டு வரப்படும். எனவே பொதுமக்கள் வேட்பாளர் முரசொலிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.  இவ்வாறு அமைச்சர் பேசினார். பிரச்சாரப் பயணத்தில், தஞ்சா வூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் ச.முரசொலி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநி மாணிக்கம், எம்எல்ஏ-க்கள் துரை. சந்திரசேகரன், கா. அண்ணாதுரை, நா.அசோக்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

;