districts

திருச்சி முக்கிய செய்திகள்

மாமேதை அம்பேத்கர்  சிலைக்கு மரியாதை

மயிலாடுதுறை, ஏப்.15 - மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, மயிலா டுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகேயுள்ள மேலப் பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து சமத்து வத்தை வலியுறுத்தும் உறுதி மொழி ஏற்கப்பட்டது. மார்க்சி ஸ்ட் கட்சி சார்பில் செம்ப னார்கோவில் ஒன்றியச் செய லாளர் கே.பி.மார்க்ஸ் தலை மையில் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாபநாசம் அருகே ரூ.1,38,820 பணம் பறிமுதல்

பாபநாசம், ஏப்.15 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே புளியங்குடி  பைபாஸ் சாலை, கடைவீதியில்  நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த  திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் ஓட்டி வந்த லாரியை சோத னையிட்டனர். அதில், அவரிடம் ரூ.67,900 பணம் இருந்ததும், அதற்குரிய ஆவணம் இல்லா ததும் தெரிய வந்தது. நிலை யான கண்காணிப்புக் குழுவி னர் பணத்தை கைப்பற்றி பாபநாசம் தாலுகா அலுவல கத்தில் ஒப்படைத்தனர். பட்டீஸ்வரம் கடைவீதியில்  தேர்தல் பறக்கும் படை குழுவி னர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த  கும்பகோணம் வட்டத்தைச்  சேர்ந்த ராஜசேகரின் வாக னத்தை சோதனையிட்டனர். அவரிடம் ரூ.70,920 பணம் இருந்ததும், அதற்குரிய ஆவ ணம் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் ஒப்ப டைத்தனர். இந்த இரு சோதனை களிலும் மொத்தம் ரூ.1,38, 820 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் நினைவு தினம் கடைப்பிடிப்பு

பாபநாசம், ஏப்.15 - மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டிருந்த 66 வீரர்கள் உயிரி ழந்தனர். வீர மரணமடைந்த அந்த வீரர்களின் நினை வாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்.14 அன்று நீத்தார் நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படு கிறது. பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலை அலுவலர் முருகானந்தம் மற்றும்  தீயணைப்பு வீரர்கள், வீர மரண மடைந்தவர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பாப நாசம் புதிய பேருந்து நிலையத் தில் மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் தீத் தடுப்பு குறித்த துண்டுப் பிர சுரங்களை வழங்கினர்.   பேராவூரணி பேராவூரணி தீயணைப்பு  மற்றும் மீட்புப் பணிகள் நிலை யத்தில் ஞாயிறன்று, தீத்தொண்டு நாள் கடைப்பிடிக் கப்பட்டது. பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர் களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) நீல கண்டன் தலைமையில், வீரமர ணம் அடைந்த வீரர்களுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேராவூரணி கடை வீதி, ரயில் நிலையம், பழைய, புதிய பேருந்து நிலை யம் ஆகிய இடங்களில், தீத் தடுப்பு விழிப்புணர்வு துண்டுப்  பிரசுரங்கள் வழங்கி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டத்திற்கு ஏப்.20-இல் உள்ளூர் விடுமுறை 

தஞ்சாவூர், ஏப்.15-  தஞ்சாவூர் மாவட்டத் தில், நடைபெறவுள்ள பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்த் திருவிழா வையொட்டி உள்ளூர் விடு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு கொண்டா டப்படவுள்ள சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி 20.4.2024 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலு வலகங்களுக்கும், கல்வி நிறு வனங்களுக்கும் உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இடங்களை பிடித்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்
மேலப்பாளையத்தில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேச்சு

திருநெல்வேலி, ஏப். 14- மேலப்பாளையம் சந்தை ரவுண் டானா அருகில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புருசை ஆத ரித்து மனித நேய  மக்கள் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மனிதநேய மக்கள்  கட்சி மாவட்டத் தலைவர் கே. எஸ்.  ரசூல் மைதீன் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசியதாவது- மக்களை வஞ்சிக்கும் செயலை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.  குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களும் பாதிக்கப்படுவர். பாஜக கூட்டணி யில் அங்கம் வகிக்காததால் தங்க ளைப் பரிசுத்தமானவர்களாக அதிமு கவினர் கூறுகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததை மக்கள் ஒரு  போதும் மறக்க மாட்டார்கள். எரிபொருள் விலையேற்றம், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை ரத்து உள்ளிட்ட ஒன்றிய அரசின் முடிவுகளால் சாமானிய மக்கள் தவித்து வருகிறார்கள். தேர்தலைக் கருத்தில் கொண்டு எரி வாயு உருளை விலையை சிறிது குறைத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்.  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் பெருவெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிய தொகையைக் கூட நிவாரணமாக பாஜக தலைமையிலான ஒன்றிய  அரசு ஒதுக்கவில்லை. ஆகவே, பத்து  ஆண்டுகால கொடுங் கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டியது மிகவும் அவசியம். தென்னிந்திய பகுதிகளில் மட்டுமே  பாஜகவுக்கு குறைந்த ஆதரவு உள்ளதாகவும், வடஇந்தியாவில் முழுமையான ஆதரவு உள்ளதா கவும் பாஜகவினர் பொய்ப் பிரச்சா ரம் செய்கிறார்கள். வடஇந்தியாவி லும் இந்தியா கூட்டணிக்கான ஆதரவு பெருகி வருகிறது. இந்தத் தேர்தலில் பெரும் பான்மை இடங்களை வென்று இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி யைப் பிடிக்கும் என்றார். பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ. தங்கபாலு, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி. எம்.மைதீன் கான், பாளையங் கோட்டை எம் எல்ஏ மு. அப்துல் வஹாப், மேயர் பி.எம்.சரவணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில்  பிறந்து மூன்று நாளான குழந்தை இறப்பு

உறவினர்கள் சாலை மறியல் தஞ்சாவூர், ஏப்.15 - தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோனூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). இவரது மனைவி  சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை கள் உள்ளன. மூன்றாவது முறையாக சீதாதேவிக்கு ஏப்.11  அன்று இரவு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டு, தஞ்சா வூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரச வத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஏப்.12 அன்று அதிகாலை சீதாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக கூறி, வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாட்களாக குழந்தையை பெற் றோருக்கு காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.   இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தால், பெற்றோர்  மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் குழந்தை இறப்பு தொடர்பாக கேட்டனர். ஆனால் மருத்துவர்கள் முறை யாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் உறவினர்கள் மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.  இதுகுறித்து உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தையின் தலையில் ரத்தம் உறைந்து  விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறந்த குழந் தைக்கு தலையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது. மருத்து வமனையில் குழந்தையை கீழே போட்டனரா, அதனால் தான் காயம் ஏற்பட்டதா என தெரியவில்லை. இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அஞ்சல் வாக்கு செலுத்த தவறிய  அரசு அலுவலர்கள் மீண்டும் அஞ்சல் வாக்கு செலுத்தலாம்

கரூர், ஏப்.15 - கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்  துறையினர், வாக்குச் சாவடி பணியாளர்கள், நுண்ணறிவு மேற்பார்வை  அலுவலர்கள் (Micro Observers) ஏற்கனவே உதவி மையத்தில் வாக்களிக்க தவறியவர்கள், தங்கள் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ய ஏதுவாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையம் 16.4.2024 காலை 7 மணி முதல் செயல்பட உள்ளது.  மேலும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு பணம்பட்டியில் உள்ள ஸ்ரீகுமரன் பாலிடெக்னிகிலும், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு மணப்பாறையில் உள்ள லட்சுமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளன.  இந்த வசதியினை காவல்துறையினர் மற்றும் வாக்குச் சாவடி  பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட தேர்தல்  அலுவலர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

;