districts

img

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஏப்.3-  12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியா ளர்கள் சங்கம் சார்பில் மாநிலம்  முழுவதும் மாவட்ட தலைநகரங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடன் தள்ளுபடியில் அனுமதிக்  கப்பட்ட பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள்  அனைத்திற்கும் உரிய தொகையை  வட்டி இழப்பின்றி அனைத்து சங்  கங்களுக்கும் வழங்கி சங்கங்க ளின் நிதிநெருக்கடியை போக்கிட வேண்டும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியா ளர்கள் அனைவருக்கும் கேரள  மாநிலத்தில் வழங்கப்படுவ தைப்போல ஓய்வூதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்  டும், கூட்டுறவுத்துறையில் உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. பெரம்பலூரில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் திங்களன்று பாலக்  கரை பகுதியிலிருந்து ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கணே சன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குணசேகரன், பொருளா ளர் கோவிந்தசாமி, ஓய்வு பெற் றோர் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செய லாளர் காமராஜர், மாவட்டப் பொருளாளர் முத்து, துணை தலை வர்கள் தங்கராஜ், தர்மலிங்கம், இணைச் செயலாளர்கள் பெரி யக்காள், வெங்கடேஷ் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
அரியலூர்
அரியலூர் ஒற்றுமைத் திடலில் இருந்து, அண்ணாசிலை வரை  பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்  தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்  டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கோ. தமிழ்மணி, பொருளாளர் கோ. பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;